லியோ படத்துல செஞ்ச மிகப்பெரிய மிஸ்டேக் அதுதான்... இனி எந்த படத்துலையும் அதை செய்ய மாட்டேன் - லோகேஷ் கனகராஜ்

Published : Dec 17, 2023, 08:30 AM IST

லியோ படத்துல செஞ்ச தவறை இனி தான் இயக்கும் எந்த படத்திலும் செய்ய மாட்டேன் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.

PREV
14
லியோ படத்துல செஞ்ச மிகப்பெரிய மிஸ்டேக் அதுதான்... இனி எந்த படத்துலையும் அதை செய்ய மாட்டேன் - லோகேஷ் கனகராஜ்
Vijay, Lokesh Kanagaraj

தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் தொடங்கி லியோ வரை தொடர்ந்து ஐந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள லோகேஷ் தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் ஜி ஸ்குவாடு என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் படங்களை தயாரிக்கவும், வெளியிடவும் முடிவு செய்து அதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்.

24
Leo movie

ஜி ஸ்குவாடு நிறுவனம் மூலம் லோகேஷ் கனகராஜ் முதலில் வெளியிட்ட திரைப்படம் தான் ஃபைட் கிளப். உறியடி படத்தின் நாயகன் விஜயகுமார் நடித்துள்ள இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படத்திற்கு பின்னர் ரத்னகுமார் இயக்கும் படத்தை தயாரிக்கும் லோகி, சீயான் விக்ரம் படம் ஒன்றையும் தன் தயாரிப்பில் எடுக்க முடிவெடுத்துள்ளார். இப்படி தயாரிப்பாளராகவும் செம்ம பிசியாக வருகிறார் லோகி.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Director Lokesh Kanagaraj

இதுதவிர அவர் கைவசம் தற்போது ரஜினிகாந்தின் தலைவர் 171 திரைப்படமும் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. அதையும் அதிரடி ஆக்‌ஷன் படமாகவே எடுக்க திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனிடையே சமீபத்தில் ஃபைட் கிளப் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளின் போது தலைவர் 171 படத்தின் போது தான் இந்த விஷயங்களையெல்லாம் செய்யப்போவதில்லை என்று மனம்திறந்து பேசி இருக்கிறார்.

44
Thalapathy vijay, Director Lokesh Kanagaraj

அதில் முக்கியமான ஒன்று தான் படம் தொடங்கும் முன்பே ரிலீஸ் தேதியை அறிவிப்பது. அவர் கடைசியாக இயக்கிய லியோ படத்துக்கு அந்த ஃபார்முலாவை பின்பற்றினார். இதுகுறித்து அவர் கூறியதாவது : “லியோ படத்துல இரண்டாம் பாதியில் நிறைய பிரச்சனைகள் இருப்பதாக விமர்சனங்கள் வந்தன. நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். இனி அதுபோல் நடந்துவிடக் கூடாது என்பதற்காக ரிலீஸ் தேதி அறிவிக்காமல் படத்தை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். லியோலையும் அந்த ரிலீஸ் தேதி அறிவித்த பின் ஷூட்டிங் தொடங்குனது நாம கேட்டு வாங்கிக்கிட்டது தான். நம்ம ஒரு ஆர்வத்துல போயிடுறோம். ஒரு பெரிய படத்தை 10 மாசத்துல எடுத்துமுடிக்கிறது சுலபம் அல்ல. அவ்வளவு வேகம் தேவையில்லைனு நினைக்குறேன்” என லோகி கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... மயில்சாமி முதல் மாரிமுத்து வரை... 2023-ல் திடீர் மரணத்தால் ரசிகர்களை கண்ணீர் கடலில் மூழ்க வைத்த திரைபிரபலங்கள்

Read more Photos on
click me!

Recommended Stories