- Home
- Gallery
- மயில்சாமி முதல் மாரிமுத்து வரை... 2023-ல் திடீர் மரணத்தால் ரசிகர்களை கண்ணீர் கடலில் மூழ்க வைத்த திரைபிரபலங்கள்
மயில்சாமி முதல் மாரிமுத்து வரை... 2023-ல் திடீர் மரணத்தால் ரசிகர்களை கண்ணீர் கடலில் மூழ்க வைத்த திரைபிரபலங்கள்
2023-ம் ஆண்டு தமிழ் திரையுலகைச் சேர்ந்த சில முக்கிய பிரபலங்களின் மரணம் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் உலுக்கியது அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Tamil cinema celebrities death in 2023
2023-ம் ஆண்டு தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்ற ஒரு ஆண்டாகவே அமைந்தது. இந்த ஆண்டு கோலிவுட்டில் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமின்றி சித்தா, போர் தொழில், இறுகப்பற்று, டாடா, குட் நைட் போன்ற சிறு பட்ஜெட் படங்களும் சக்கைப்போடு போட்டன. இதனால் வியாபார ரீதியாக தமிழ் சினிமா அடுத்தக்கட்டத்திற்கு சென்றாலும், இந்த ஆண்டு சில பிரபலங்களின் மரணங்கள் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது அதைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
மயில்சாமி
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மயில்சாமி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரின் எதிர்பாரா மரணம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
மனோபாலா
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக திகழ்ந்து வந்தவர் மனோபாலா. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் கடந்த மே மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனோபாலாவின் இந்த எதிர்பாரா மரணம் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சரத்பாபு
தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் அவருடன் முத்து, அண்ணாமலை போன்ற படங்களில் நடித்தவருமான சரத்பாபு கடந்த மே மாதம் உயிரிழந்தார். கேன்சர் பாதிப்பால அவதிப்பட்டு வந்த அவர் கடைசியாக போர் தொழில் என்கிற படத்தில் நடித்திருந்தார். அப்படம் ரிலீஸ் ஆகும் முன்பே அவர் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரிமுத்து
எதிர்நீச்சல் தொடர் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் மாரிமுத்து. இவர் சினிமாவிலும் இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றி இருக்கிறார். இருப்பினும் அந்த ஒரே சீரியல் அவரை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. இவர் கடந்த செப்டம்பர் 8-ந் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரது மரணம் சினிமா மட்டுமின்றி சின்னத்திரையினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
விஜய் ஆண்டனி மகள் மீரா
தமிழ் திரையுலகை உலுக்கிய மரணங்களில் விஜய் ஆண்டனி மகள் மீராவின் மரணமும் ஒன்று. கடந்த செப்டம்பர் மாதம் மீரா வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களையும் கலங்கச் செய்தது. மகளின் மரணத்தில் இருந்து மீள முடியாமல் அவரது தாய் ஃபாத்திமா சமீபத்தில் போட்ட எக்ஸ் தள பதிவு காண்போரை கண்கலங்க செய்தது.
டிபி கஜேந்திரன்
நடிகரும், இயக்குனருமான டிபி கஜேந்திரன் கடந்த பிப்ரவரி மாதம் மரணமடைந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் என்பதால் முதல்வர் நேரில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது திரையுலகினரை உலுக்கியது.
இதையும் படியுங்கள்... ஹீரோவா இல்ல... தொழிலதிபராக வந்து உதயநிதியிடம் வெள்ள நிவாரண நிதி வழங்கிய சூரி - அதுவும் இத்தனை லட்சமா?