தற்போது சீரியல், விளம்பரங்கள் என படு பிசியாக நடித்து வருகிறார் ஆலியா. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வரும் பல்வேறு விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி பிரம்மாண்டமாக கிரக பிரவேசம் ஒன்றை ஆலியா நடத்தி இருந்தார். இதுதொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.