டிஆர்பி-க்காக பிரபல தமிழ் ஹீரோவை களமிறக்கும் தெலுங்கு பிக்பாஸ் டீம் - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

Published : Jul 26, 2024, 02:35 PM IST

தமிழ் சினிமாவில் பெண்கள் மனதை கொள்ளைகொண்ட ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்த பிரபல நடிகர் தற்போது தெலுங்கு பிக்பாஸில் கலந்துகொள்ள உள்ளாராம்.

PREV
14
டிஆர்பி-க்காக பிரபல தமிழ் ஹீரோவை களமிறக்கும் தெலுங்கு பிக்பாஸ் டீம் - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
Bigg Boss Telugu 8

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்தியில் 15 சீசன்களுக்கு மேலாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, தென்னிந்திய மொழிகளில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கில் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு மொழிகளிலுமே இதுவரை 7 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து உள்ளன.

24
Nagarjuna

விரைவில் 8-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்தே கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை அதன் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும் தொகுத்து வழங்கினர். அதன்பின்னர் மூன்றாவது சீசனில் இருந்து தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தான் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இதையும் படியுங்கள்... தளபதி விஜய் டீன் ஏஜ் பருவத்திலேயே செம்ம ஸ்டைலிஷா இருக்காரே! பலரும் பார்த்திடாத அரிய புகைப்படங்கள்!

34
Abbas

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கடந்த சீசனில் ரூ.20 கோடி சம்பளம் வாங்கிய நாகார்ஜுனா, விரைவில் தொடங்க உள்ள 8வது சீசனுக்காக தன் சம்பளத்தை ரூ.30 கோடியாக உயர்த்திவிட்டாராம். இது ஒருபுறம் இருக்க இந்த சீசனில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரமும் ஒவ்வொன்றாக கசிந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், இந்த முறை தமிழ் ஹீரோ ஒருவரை போட்டியாளராக களமிறக்க உள்ளார்களாம்.

44
Abbas participate in Bigg Boss Telugu

அந்த ஹீரோ வேறுயாருமில்லை நடிகர் அப்பாஸ் தான். கோலிவுட்டில் ரொமாண்டிக் ஹீரோவாக கொடிகட்டிப்பறந்த அப்பாஸ், ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்து சைடு ரோலில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் பட வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகி நியூசிலாந்தில் குடும்பத்துடன் செட்டில் ஆனார். இவர் கடந்த ஆண்டே தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக பேச்சு அடிபட்ட நிலையில், இந்த ஆண்டு அவர் தெலுங்கு பிக்பாஸில் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன. அவருக்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... 42 வயதில்.. 10 வருட காத்திருப்புக்கு பின் இரட்டை குழந்தைகளுக்கு தாயான சீரியல் நடிகை ஜூலி! குவியும் வாழ்ந்து!

click me!

Recommended Stories