- Home
- Gallery
- தளபதி விஜய் டீன் ஏஜ் பருவத்திலேயே செம்ம ஸ்டைலிஷா இருக்காரே! பலரும் பார்த்திடாத அரிய புகைப்படங்கள்!
தளபதி விஜய் டீன் ஏஜ் பருவத்திலேயே செம்ம ஸ்டைலிஷா இருக்காரே! பலரும் பார்த்திடாத அரிய புகைப்படங்கள்!
தளபதி விஜய்யின் டீன் ஏஜ், பருவ புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

Thalapathy Vijay
இன்று, தமிழ் சினிமாவில் 200 கோடி, சம்பளம் பெரும் நடிகராக உள்ள விஜய் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக மாறியவர். அதன்படி தன்னுடைய 10 வயதில், தந்தை இயக்கிய 'வெற்றி' என்கிற படத்தில் நடித்தார்.
Thalapathy Vijay
இதை தொடர்ந்து தன்னுடைய 18 வயதில், தந்தை SAC இயக்கத்தில் 1992-ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்து வந்த விஜய்க்கு, மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது, இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நடித்த 'பூவே உனக்காக' திரைப்படம்.
தனுஷ் நடித்துள்ள 'ராயன்' படத்தை ஏன் பார்க்க வேண்டும்? 5 முக்கிய காரணங்கள் இதோ..!
Thalapathy Vijay
இந்த படத்தை தொடர்ந்து, விஜய் தன்னுடைய கேரியரில் ஏறுமுகத்தை நோக்கி நகர துவங்கினார். அதன்படி இவர் நடித்த லவ் டுடே, ஒன்ஸ் மோர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, ப்ரியமானவளே, பிரெண்ட்ஸ் போன்ற படங்கள் வரிசையாக ஹிட் அடித்தது.
Thalapathy Vijay
விஜய் முன்னணி இடத்தை பிடித்த பின்னர் கதை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கினார். வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து அந்த விஜய் இதுவரை மொத்தம் 68 படங்களில் நடித்துள்ளார்.
இது என்னடா சிங்கபெண்ணுக்கு வந்த சோதனை? தடாலடியாக அடுத்தடுத்து டாப்புக்கு வந்த 2 விஜய் டிவி தொடர்கள்!
Thalapathy Vijay
மேலும் 3 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 1 காஸ்மோபாலிடன் விருது, 1 இந்தியா டுடே விருது, 1 சிமா விருது, 8 விஜய் விருதுகள், 3 எடிசன் விருதுகள், 2 விகடன் விருதுகள் உட்பட 50-திற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
Thalapathy Vijay
தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடித்துள்ள கோட் திரைப்படம்... கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
Thalapathy Vijay
தளபதி விஜய் நடிப்பை தொடர்ந்து அதிரடியாக தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ளதால்... இவரின் கடைசி திரைப்படம், அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் திரைப்படம் தான்.
Thalapathy Vijay
ஏற்கனவே தளபதி 69-ஆவது படம் தான் தன்னுடைய கடைசி படம் என்பதை அறிவித்துவிட்டாலும், இதுவரை இப்படத்தின் இயக்குனர், மற்றும் பிற தகவல்கள் வெளியாகவில்லை.
Thalapathy Vijay
இது ஒருபுறம் இருக்க, தற்போது தளபதி விஜய்யின் டீன் ஏஜ் போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அப்போதே செம்ம ஸ்டைலிஷாக தளபதி உள்ளார். அதை நீங்களே பாருங்கள்.