கொல்கத்தாவில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமாகி, அதன் பிறகு வெள்ளித்திரையில் நாயகியாக மாறிய நடிகை தான் நரியா சென். கொல்கத்தாவில் கடந்த 1981 ஆம் ஆண்டு பிறந்த ரியா சென், குழந்தை நட்சத்திரமாக இந்தி மற்றும் பெங்காளி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் கதையின் நாயகியாக முதல் முதலில் அறிமுகமானது, தமிழில் கடந்த 1999ம் ஆண்டு பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் அவருடைய மகன் மனோஜ் நடிப்பில் வெளியான தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் தான். அதன் பிறகு பிரசாந்தின் "குட்லக்" என்கின்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருப்பது அனைவரும் அறிந்ததே. தொடர்ச்சியாக ஹிந்தி மொழியில் பல திரைப்படங்களில் நடித்த இவர் இறுதியாக தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் கிங் அர்ஜுனனின் "அரசாட்சி" என்கின்ற திரைப்படத்தில் தான்.
33
Actress Riya
அதன் பிறகு பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்காத ரியா சென் கடந்த 2017 ஆம் ஆண்டு சிவம் திவாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இன்றளவும் தொடர்ச்சியாக ஹிந்தி மொழியிலும் பெங்காளி மொழியிலும் படங்களில் நடித்து வந்தாலும் மிக மிக குறைவான அளவிலான படங்களில் மட்டுமே இவர் நடிக்கின்றார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரியா சென், கவர்ச்சியான தனது புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.