தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தற்போது ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய 170-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்த படம் பணிகளை முடித்தவுடன் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தனது 171வது திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார். இப்பொது அந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எதிராக வில்லனாக நடிக்க 3 டாப் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஒரு கையில் அருவா... இன்னொரு கையில் வெட்டப்பட்ட தலை! ரணகொடூரமாக இருக்கும் விஷால் 'ரத்னம்' பட ஃபர்ஸ்ட் லுக்!