Published : Jul 16, 2024, 11:55 AM ISTUpdated : Jul 16, 2024, 03:43 PM IST
Sun TV Serial Actress Salary : டிஆர்பி அடிப்படையில் முன்னணி இடத்தை பிடிக்கும் சீரியல் நடிகைகளின் சம்பள விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அதிக சம்பளம் வாங்கும் சன் டிவி சீரியல் நடிகை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சினிமாக்களை மிஞ்சும் சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. வயதானவர்கள் தான் சீரியல் பார்ப்பார்கள் என்ற நிலை மாறி, தற்போது இளைய தலைமுறையினரும் அதிகமாக சீரியல்களை ரசித்து வருகின்றனர். தற்போதைய காலத்தில் பல சேனல்கள் பல்வேறு சீரியல்களை போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பி வருகின்றன.
27
Ethirneechal and Kayal Actress Salary
ஆனால் மற்ற சேனல்களுக்கு ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு வரவேற்பு கிடைத்தாலும் சீரியல் என்றாலே அது சன் டிவி சீரியல் தான் என்ற நிலையே தற்போதும் நீடித்து வருகிறது. எனவே டிஆர்பி அடிப்படையில் முன்னணி இடத்தை பிடிக்கும் சீரியல் நடிகைகளின் சம்பள விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அதிக சம்பளம் வாங்கும் சன் டிவி சீரியல் நடிகை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
37
Madhumitha Ethirneechal Salary Details
மதுமிதா
பலரின் விருப்பமான சீரியல்களில் ஒன்றாக எதிர்நீச்சல் சீரியல் உள்ளது. இந்த சீரியலில் ஜனனி கேரக்டரில் மதுமிதா நடித்து வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த இவர் கன்னட தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்துள்ளார். எதிர்நீச்சல் சீரியலில் தமிழ் ரசிகர்களின் மனதை வென்ற மதுமிதாவின் ஒருநாள் சம்பளம் ரூ.15,000 என்று கூறப்படுகிறது.
47
Chaitra Reddy Kayal Salary Details
சைத்ரா ரெட்டி
சின்னத்திரையில் நெகட்டிவ் ரோலில் நடித்து அனைவரையும் ஈர்த்த சைத்ரா ரெட்டி, தற்போது சன் டிவியில் கயல் சீரியல் மூலம் பிரபலமடைந்துள்ளார். கயல் என்ற கேரக்டர் மூலம் தமிழ்நாட்டின் இல்லத்தரசிகளின் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வருகிறார். சைத்ரா ரெட்டி என்ற பெயரே மறந்து போகும் அளவுக்கு ரசிகர்கள் கயலை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகை சைத்ரா ரெட்டியின் ஒரு நாள் சம்பளம் ரூ.25,000 ஆகும்.
57
Gabriella Cellus Sundari Salary Details
கேப்ரியல்லா செல்லஸ்:
டிக்டாக் மூலம் பிரபலமான கேப்ரியல்லா, சன் டிவியில் சுந்தரி என்ற சீரியலில் முதன்மை கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியலின் 2-ம் பாகம் ஒளிபரப்பாகி வரும் நிலையில் சுந்தரி கேரக்டர் மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டார். இவரின் ஒருநாள் சம்பளம் ரூ.12,000 ஆகும்.
67
c
ஆல்யா மானசா:
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்தன் மூலம் அனைவரையும் கவர்ந்த ஆல்யா மானசா, சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ராஜா ராணி 2 சீரியலில் நடித்த போது கர்ப்பமானதால் சீரியலை விட்டு விலகினார். தற்போது சன் டிவியில் இனியா சீரியலில் லீட் ரோலில் ஆலியா நடித்து வருகிறார். இவர் ஒரு நாளைக்கு ரூ.20,000 சம்பளம் வாங்குகிறாராம்.
77
Sruthi Raj
ஸ்ருதி ராஜ்
சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ருதி ராஜ். பின்னர் ஆபிஸ், அழகு, தாலாட்டு போன்ற பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். ஸ்ருதி ராஜ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். அவர் ஒரு நாளைக்கு ரூ.40,000 சம்பளம் வாங்குகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.