இயக்குனர் அட்லீ, பாலிவுட் திரை உலகில் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ஜவான். இந்த படத்தில், கதாநாயகனாக ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா - தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்க, முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி, சஞ்சய் தத், யோகி பாபு, பிரியாமணி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.