‘சரவணன் மீனாட்சி’ தொடர் நாயகன் செந்தில் உடன் ஜோடி சேர்ந்த ஜோதிகா... அதுவும் யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

Published : Sep 19, 2023, 04:25 PM IST

சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்த செந்தில் தற்போது முதன்முறையாக நடிகை ஜோதிகாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.

PREV
14
‘சரவணன் மீனாட்சி’ தொடர் நாயகன் செந்தில் உடன் ஜோடி சேர்ந்த ஜோதிகா... அதுவும் யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?
senthil, jyothika

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொடர் என்றால் அது சரவணன் மீனாட்சி தான். மிர்ச்சி செந்திலும், ஸ்ரீஜாவும் ஜோடியாக நடித்திருந்த இந்த சீரியல் சக்கைப்போடு போட்டது. அதிலும் இந்த சீரியல் மூன்று சீசன்களாக நடத்தப்பட்டது. இதன் முதல் சீசனில் தான் செந்தில் நாயகனாக நடித்திருந்தார். அந்த சீரியலின் பலமே செந்தில் ஸ்ரீஜாவின் கெமிஸ்ட்ரி தான். சீரியலைப் போல் ரியல் லைபிலும் இவர்கள் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

24
mirchi senthil with jyothika

சரவணன் மீனாட்சி தொடருக்கு பின்னர் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த செந்திலும் பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவர் தற்போது மீண்டும் சின்னத்திரை பக்கமே திரும்பி உள்ளார். தற்போது இவர் நடிப்பில் அண்ணா என்கிற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த தொடர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... யூடியூபர் வாசனுக்கு சிறை தண்டனை விதிப்பு... டிடிஎப் மீது அடுத்தகட்ட ஆக்‌ஷனுக்கு தயாரான போலீஸ்..!

34
jyothika pair up with mirchi senthil

இப்படி சீரியல் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து வரும் மிர்ச்சி செந்தில், அண்மையில் பிஸ்கட் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதுகுறித்து உற்சாகம் பொங்க அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதற்கு காரணம், அந்த விளம்பரத்தில் அவர் நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த விளம்பரத்தை நடிகரும், இயக்குனருமான கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

44
kishore, jyothika, senthil

அந்த விளம்பர ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ள மிர்ச்சி செந்தில், மற்றுமொரு சுவாரஸ்ய தகவலையும் பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால் அந்த விளம்பரத்தில் ஹீரோவாக நடித்த தனக்கும், ஹீரோயினாக நடித்த ஜோதிகாவுக்கும், இதனை இயக்கிய கிஷோருக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் என்று குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மூவரும் அக்டோபர் மாதம் 18-ந் தேதி பிறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மார்க் ஆண்டனி படத்தை தடை செய்யனும் - காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திருநங்கை பரபரப்பு புகார்

click me!

Recommended Stories