கொழுந்தியாளை பலாத்காரம் செய்த மாமா! வீடியோவை காட்டி மிரட்டி ஓயாமல் உல்லாசம்! அதிர்ச்சியில் காதல் மனைவி!

First Published | Mar 24, 2024, 9:36 AM IST

காதல் மனைவிக்கு தெரியாமல் கொழுந்தியாளை அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Love Marriage

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள பெரியசோரகை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை அடித்து உதைத்து தாய் வீட்டுக்கு சென்று நகை, பணம் வாங்கி வருமாறு கூறி வரதட்சணை கொடுமை செய்து வந்துள்ளார். 

Rape

இதை அறிந்த தங்கை அக்காவை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் மனைவி இல்லாத நிலையில் தனியாக இருந்த சுரேஷ்குமார், தனது கொழுந்தியாளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி கொழுந்தியாளை அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளார். 

Tap to resize

Police Arrest

இந்நிலையில், மனைவியிடம் உனக்கு குழந்தை பிறக்கவில்லை. ஆகையால், உன் தங்கையை 2ம் திருமணம் செய்து கொள்வதாக சுரேஷ்குமார் கூறியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனைவியை  வீட்டை விட்டு விரட்டியுள்ளார். இதனையடுத்து அக்கா, தங்கை இருவரும் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுரேஷ்குமார் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்து அவரது செல்போனையும் ஆய்வு செய்து வருகின்றனர். 

Latest Videos

click me!