ரெடின்ஸ் கிங்ஸ்லியை இரண்டாவது திருமணம் செய்த சங்கீதாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் கியூட் புகைப்படம்!

Published : Dec 18, 2023, 03:11 PM IST

சில தமிழ் படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பிரபலமான சங்கீதா தன்னுடைய மகள் ஷிவியாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்னு வைரலாகி வருகிறது.  

PREV
16
ரெடின்ஸ் கிங்ஸ்லியை இரண்டாவது திருமணம் செய்த சங்கீதாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் கியூட் புகைப்படம்!

நடிகை சங்கீதா சென்னையை சேர்ந்தவர் என்றாலும், இவர் நடிகையாக அறிமுகமானது மராத்தி மொழியில் தான். இதை தொடர்ந்து ஹிந்தியில் சில படங்களில்... சிறு சிறு ரோலில் நடித்தார். பின்னர் தமிழில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அதிரடியாக சின்னத்திரை நடிகையாக மாறினார். 

26

அரண்மனை கிளி, திருமகள் போன்ற சீரியல்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த சங்கீதா, தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில்  ஒரு சிறு ரோலில் நடித்து கவனம் பெற்றார். தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'ஆனந்த ராகம்' சீரியலில் நடித்து வருகிறார். 

இது என்ன சிங்குச்சான்.. சிங்குச்சான்னு.! கலர் ஃபுல் பாவாடை தாவணியில் இடையழகை காட்டிய ரம்யா பாண்டியன்!

36

நடிகை சங்கீதா, பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை பல வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், டிசம்பர் 10ஆம் தேதி பெங்களூருவில் இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. கிங்ஸ்லி வீட்டு வழக்கத்தின் படி கிருஸ்தவ முறைப்படியும், சங்கீதா வீடு வழக்கத்தின் படி இந்து முறைப்படி இரண்டு தாலி கட்டினார்.

46

ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா திருமணத்தில் சில குறிப்பிட்ட பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும் இவர்களின் திருமணத்திற்க்கு பின்னர் பலர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வந்தனர். அதில் ஒன்று தான் சங்கீதாவுக்கு இது முதல் திருமணமா? என்பது. இதுகுறித்து வெளியான தகவலில் ஏற்கனவே சங்கீதாவுக்கு அவரின் பெற்றோர் கடந்த 2009-ஆம் ஆண்டு, கிரிஷ் என்பவரை திருமணம் செய்து வைத்தனர் என்பது தெரியவந்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

56

திருமணம் ஆகி பல வருடங்கள் இந்த ஜோடி ஒன்றாக வாழ்ந்த நிலையில், ஒரு பெண் குழந்தையும் சங்கீதாவுக்கு உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் சங்கீதா மற்றும் கிரிஷ்  இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு... விவாகரத்து வரை கொண்டு வந்து நிறுத்தியது. விவாகரத்துக்கு பின்னர், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சங்கீதாவின் மகள் புகைப்படம் வெளியாகியுள்ளது.

66

ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா ஜோடி திருமணம் தற்போது மைசூர் சென்றுள்ள நிலையில், சங்கீதா பெண் குழந்தை ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து, இது தான் உங்கள் குழந்தை ஷிவியாவா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.குழந்தை க்யூட்டாக சங்கீதா போலவே இருப்பது தான் இந்த சந்தேகத்திற்கு காரணம் பாஸ்...

Bigg Boss: பிக்பாஸ் நிகழ்ச்சி வன்மத்தை தூண்டுகிறதா? வனிதாவை தொடர்ந்து ரசிகர்களால் தாக்கப்பட்ட போட்டியாளர்.!

Read more Photos on
click me!

Recommended Stories