டாக்டர் வெற்றியால், ராசியான நடிகை என பெயர் எடுத்த பிரியங்காவுக்கு, அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. குறிப்பாக நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான், மற்றும் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' போன்ற படங்களில் நடித்தார்.