கலைஞர் 100 விழா வருகிற டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள நிலையில், அதற்காக கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அரசியல் மட்டுமின்றி சினிமாவிலும் பல்வேறு மகத்தான சாதனைகளை படைத்துள்ளவர் கலைஞர் கருணாநிதி. சிறுவயதில் இருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்று கொண்டிருந்த கலைஞர், சினிமாவில் சமூக மாற்றத்தை கொண்டுவந்ததோடு, தன்னுடைய திரைக்கதை மற்றும் வசனத்தினால் சினிமாவில் புரட்சி செய்தார். திரைப்படங்கள் மூலம் சமூக நீதியை உரக்கச் சொன்ன கலைஞருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமான நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளது.
24
rajini kamal
கலைஞர் 100 என்கிற பெயரில் நடத்தப்பட உள்ள இந்த விழாவை தமிழ் திரையுலகை சேர்ந்து தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி என ஒட்டுமொத்த சங்கங்களும் இணைந்து நடத்த உள்ளன. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற டிசம்பர் 24-ந் தேதி இந்த பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த விழா தமிழக முதல்வரும், கலைஞரின் மகனுமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க ஏராளமான நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ் திரையுலக ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர்களும் அழைப்பை ஏற்று இந்த விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர்.
44
rajinikanth, amitabh bachchan
இதுதவிர மலையாள திரையுலக சூப்பர்ஸ்டார் மோகன்லால், தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி, கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் என பல்வேறு திரையுலகை சேர்ந்த ஜாம்பவான்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் கலைஞர் நூற்றாண்டு விழா இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் நிகழ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.