Indian Railway passenger alert
விமானங்களில் மதுவை எடுத்துச் செல்லவும், குடிக்கவும் அனுமதிப்பது போல், ரயில்வேயிலும் இது போன்ற விதி உள்ளதா என்ற கேள்வி ரயில்வே பயணிகளின் மனதில் அடிக்கடி எழுகிறது. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில்களைத் தெரிந்து கொள்வோம்.
Indian Railway
பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரயிலில் சில பொருட்களை எடுத்துச் செல்ல இந்திய ரயில்வே அனுமதிப்பதில்லை, அதில் மதுவும் அடங்கும். இந்த விதியை பயணிகள் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயிலில் மது அருந்தி பயணம் செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
passenger alert
அவ்வாறு செய்தால், பயணிகளுக்கு எதிராக, ரயில்வே சட்டம் 1989, பிரிவு 165ன் கீழ், 500 ரூபாய் வரை அபராதம் மற்றும் 6 மாதங்கள் வரை சிறை தண்டனையும் அடங்கும். கூடுதலாக, பயணிகளின் டிக்கெட்டையும் ரத்து செய்யலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Indian Railways Rules
பீகார், குஜராத், மிசோரம் மற்றும் நாகாலாந்து போன்ற சில மாநிலங்களில் மதுவிலக்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில், பயணிகள் மதுவுடன் பிடிபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கையை எதிர்கொள்கின்றனர். விதிகளின்படி, ரயிலில் எந்த வகையான மதுபானங்களையும் எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.