வீட்டு வேலைக்காக சென்ற சிறுமியை தாக்கி கொடுமைப்படுத்தி கொடூரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக இருவர் மீதும் நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தில், எஸ்சி/எஸ்டி சட்டப்பிரிவுகள், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் ஆகியோர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.