நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் சலார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சாஹோ, ராதே ஷியாம், ஆதிபுருஷ் ஆகிய மூன்று படங்களும் படுதோல்வியை சந்தித்ததால், சலார் படத்தின் வெற்றியை மலைபோல் நம்பி இருக்கிறார் பிரபாஸ். இப்படத்தை கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். கேஜிஎப் படங்களை தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்து உள்ளது.
24
salaar
சலார் படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்திருக்கிறார். சலார் திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வருகிற டிசம்பர் 22-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படம் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகளும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
இந்த நிலையில், சலார் படத்தின் கதை பற்றி இயக்குனர் பிரசாந்த் நீல் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார். அதன்படி சிறுவயதில் இருந்தே மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் இருவர் மிகப்பெரிய எதிரியாக மாறி அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் தான் படத்தின் கதை என்றும், இருவருக்கும் இடையேயான நட்பு படத்தின் மையக்கருவாக இருக்கும் என்று கூறிய அவர், கேஜிஎப் படத்திற்கும் இதற்கு சுத்தமாக சம்பந்தம் இல்லை என்பதையும் உறுதிபடுத்தி உள்ளார்.
44
salaar movie story
இந்தக் கதையை கேட்ட ரசிகர்கள், இதென்ன விவேகம் பட கதை மாதிரி இருக்கே என ட்ரோல் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியாகி பிளாப் ஆன துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கொத்தா படத்தின் கதையும் இதேமாதிரி தான் இருக்கும் என ஒப்பிட்டு மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். மறுபக்கம் கதை எப்படி இருந்தாலும், மேக்கிங் தரமாக இருக்கும் என்றும், இப்படம் பிரம்மாண்ட வெற்றியை ருசிக்கும் என்றும் பிரபாஸ் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.