Published : Nov 08, 2023, 12:14 PM ISTUpdated : Nov 08, 2023, 12:17 PM IST
பிக்பாஸ் வீட்டில் வினுஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிக்சனை கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இதற்கு முந்தைய சீசன்களைக் காட்டிலும் அதிகமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அந்த வீட்டில் விவாதிக்கப்படும் விஷயங்கள் சமூக வலைதளங்களிலும் விவாத பொருளாக மாறுகிறது. முதல் வாரத்தில் ஜோவிகா - விசித்ரா இடையே கல்வியை பற்றி நடந்த விவாதம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல் தற்போது மீடூ சர்ச்சையில் பிக்பாஸ் நிகழ்ச்சி சிக்கி உள்ளது.
25
Bigg Boss Tamil season 7
பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்கள் கடந்த வாரம் பிரதீப்புக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, அவர் தங்களிடம் தகாத வார்த்தைகளை உபயோகம் செய்வதாகவும், அவரால் தாங்கள் இந்த வீட்டில் பாதுகாப்பாக உணரவில்லை என கூறினர். இதைக்கேட்ட கமல்ஹாசன், பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். பிரதீப் தரப்பு நியாயத்தை கேட்காமல் கமல் இப்படி அதிரடி ஆக்ஷனில் இறங்கியதை பலரும் கண்டித்தனர்.
35
kamalhaasan
போக போகதான் பிரதீப் மீது பெண் போட்டியாளர்கள் கூறிய பல்வேறு குற்றச்சாட்டுகள் பொய்யானவை என தெரியவருகிறது. இதனால் பிரதீப்புக்கு ஆதரவுக்குரல் எழுப்பி, அவரை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் பிரதீப் தவிர மற்ற போட்டியாளர்கள் கூறிய சர்ச்சைக்குரிய கமெண்ட்டுகளை சேகரித்து அதனை குறும்படமாக போட்டுள்ளார் பிக்பாஸ்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
அந்த குறும்படத்தில் நிக்சன், வினுஷாவை உருவகேலி செய்த கமெண்ட்டும் இடம்பெற்று உள்ளது. இதைப்பார்த்த விசித்ரா, ரவீனா, அர்ச்சனா ஆகியோர் கோபமடைந்து வினுஷாவுக்காக நாங்க கேட்போம் என்று நிக்சனுக்கு எதிராக போர்க்கொடி தூக்க, பிக்பாஸ் வீடே அதிர்ச்சியில் உரைந்துபோனது. இதனால் இந்த வாரம் நிக்சனுக்கு எதிராக அவர் உரிமைக்குரல் எழுப்ப வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
55
kamalhaasan
ஏற்கனவே பெண்கள் விஷயத்தில் பிரதீப் சிக்கியதால் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றிய கமல்ஹாசன், இந்த வாரம் நிக்சனையும் அவ்வாறு வெளியேற்றுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த விஷயத்தை கமல்ஹாசன் கண்டிப்பாக கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனால் இந்த வாரமும் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.