கணவருக்கே கல்தாவா? விக்னேஷ் சிவனின் எல்ஐசி படத்தில் இருந்து விலகும் நயன்தாரா - காரணம் என்ன?

First Published | Jan 18, 2024, 8:45 AM IST

நடிகை நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்ஐசி திரைப்படத்தில் இருந்து விலக முடிவெடுத்து உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கிறார். சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், பின்னர் நானும் ரெளடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கினார். இதையடுத்து அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க கமிட் ஆனார் விக்கி. அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்னரே அதில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் விக்கி.

அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் தன்னுடைய அடுத்த படம் பற்றி அறிவிக்காமல் இருந்த விக்கி, பின்னர் தான் ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து எடுப்பதாக இருந்து கைவிட்ட கதையை மீண்டும் தூசி தட்டி எடுத்தார். எல்ஐசி என பெயரிடப்பட்ட இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக லவ் டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைக்க முடிவு செய்து அவரையும் படத்தில் ஒப்பந்தம் செய்தார் விக்னேஷ் சிவன்.

இதையும் படியுங்கள்... பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கோட் லைஃப்' படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்ட ரன்வீர் சிங்!

Tap to resize

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளனர். மேலும் இப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. அவர் படத்தின் நாயகன் பிரதீப்புக்கு அக்காவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில், நடிகை நயன்தாரா இப்படத்தில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

ஜவான் படத்திற்கு பின்னர் தன்னுடையை சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்திய நயன்தாரா. எல்ஐசி படத்திற்கு அதே தொகையை கேட்டாராம். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் லலித், இவ்வளவு தொகையை கொடுத்தால் படத்தின் பட்ஜெட் எகிறிவிடும் என்பதால் அவருக்கு பதில் வேறு ஹீரோயினை போடச் சொல்லி விக்கியிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் நயன்தாரா தன் சம்பளத்தை குறைத்துக்கொண்டு இப்படத்தில் நடிப்பாரா இல்லை விலகிவிடுவாரா என்கிற கேள்வி சோசியல் மீடியாவில் எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்... படம் வெளியாகும் போது அவ்வளவு அழுத்தம் இருந்தது! 'மிஷன் சாப்டர்1' வெற்றி விழாவில் அருண் விஜய் உருக்கம்!

Latest Videos

click me!