22 வருடங்களாக தொடரும் நட்பு... இணையத்தை கலக்கும் மெட்டி ஒலி சிஸ்டர்ஸின் ரீ-யூனியன் போட்டோஸ்

Published : Jan 31, 2024, 09:02 AM IST

மெட்டி ஒலி சீரியலில் சகோதரிகளாக நடித்த காவேரி, வனஜா மற்றும் காயத்ரி ஆகியோர் சமீபத்தில் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

PREV
14
22 வருடங்களாக தொடரும் நட்பு... இணையத்தை கலக்கும் மெட்டி ஒலி சிஸ்டர்ஸின் ரீ-யூனியன் போட்டோஸ்
Metti Oli serial

சன் டிவியில் ஒளிபரப்பான பிளாக்பஸ்டர் சீரியல்களில் மெட்டி ஒலி சீரியலும் ஒன்று. திருமுருகன் இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் சுமார் 3 ஆண்டுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. 90ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியலாகவும் இது இருந்து வந்தது. இந்த சீரியலின் ஓப்பனிங் சாங் இன்றளவும் பிரபலமாக உள்ளது. இந்த சீரியல் 5 சகோதரிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. குடும்ப உறவுகளின் வலிகளையும், சிக்கல்களையும் யதார்த்தமாக காட்டியது இந்த சீரியல்.

24
Thirumurugan

மெட்டி ஒலி சீரியலில் காவேரி, வனஜா, காயத்ரி, உமா, ரேவதி பிரியா ஆகியோர் ஐந்து சகோதரிகளாக நடித்தது இருந்தனர். இதில் காவேரி தனம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல் காயத்ரி சரோவாகவும், வனஜா லீலாவாகவும், உமா விஜியாகவும், ரேவதி பிரியா பவானியாகவும் நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் இவர்கள் ஐந்து பேரிடையே நட்பும் மலர்ந்தது.

இதையும் படியுங்கள்... அரவிந்த் சாமி என்னோட புள்ள தான்... பிறந்த உடனே தத்து கொடுத்துட்டேன் - மனம் திறந்த மெட்டி ஒலி சீரியல் நடிகர்

34
Metti Oli Sisters

இந்த 5 சகோதரிகளின் நட்பு 22 ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த நிலையில், மெட்டி ஒலி சகோதரிகள் சமீபத்தில் சந்தித்துக் கொண்டபோது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் காவேரி, வனஜா மற்றும் காயத்ரி ஆகியோர் மட்டுமே சந்தித்துக் கொண்டனர். ரேவதி பிரியா மட்டும் இந்த ரீயூனியனில் கலந்துகொள்ளவில்லை. இவர்களின் மற்றொரு சகோதரியான விஜி கடந்த 2021-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

44
Metti Oli Sisters Re Union

மெட்டி ஒலி சகோதரிகளின் சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் 22 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தற்போது எடுத்துக்கொண்டு புகைப்படத்தையும் எடிட் செய்து 22 வருட சேலஞ் என ஒப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் மெட்டி ஒலி சீரியல் பற்றி தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து வருவதோடு, அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... எதிர்நீச்சலை தட்டிதூக்க வருகிறது புது சீரியல்... அதுவும் 90ஸ் கிட்ஸோட பேவரைட் சீரியலின் இரண்டாம் பாகம்!

Read more Photos on
click me!

Recommended Stories