2023-ல் கோலிவுட்டின் 2 மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களுக்கு இடையேயான போர்.. வெற்றி பெற்றது ரஜினியா? விஜய்யா?

First Published Feb 20, 2024, 12:21 PM IST

கோலிவுட்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களாக கருதப்படும், லியோ, ஜெயிலரின் பட்ஜெட், வசூல், ரேட்டிங் ஆகியவற்றின் ஒப்பீடு குறித்து பார்க்கலாம்.

Leo Jailer

கோலிவுட் சினிமாவுக்கு கடந்த ஆண்டு வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்தது. கடந்த இரண்டு படங்கள் பிளாக்பஸ்டர்களாக உருவாகி உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது. ஆம்.. ரஜினியின் ஜெயிலர் மற்றும் விஜய்யின் லியோ ஆகியவை தான் அந்த படங்கள். இந்த இரண்டு படங்களும் தமிழ் திரையுலகில் அதிக வசூல் செய்த முதல் 3 படங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. எனவே, இன்று, இந்த இரண்டு படங்களின் பட்ஜெட், வசூல், ரேட்டிங் ஆகியவற்றின் ஒப்பீடு குறித்து பார்க்கலாம்.

ஜெயிலர் பாக்ஸ் ஆபீஸ் வசூல் : 

ரஜினியின் அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதே போல் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனவே எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினி இருந்தார். நெல்சனுக்கும் கிட்டத்தட்ட இதே நிலை தான். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக ஜெயிலர் வெளியானது.

ஜெயிலர் படம் வெளியான உடனே பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தது. இது பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் எதிரொலித்தது. அதன்படி ஜெயிலர் படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் ரூ. 407.1 கோடி வசூல் செய்தது.. வெளிநாட்டு சந்தையில், இந்த படம் 197.9 கோடிகளை ஈட்டியது, இதன் மூலம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 605 கோடி வசூலை எட்டியது.

லியோ வசூல்

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்த படம் லியோ. மேலும் எல்சியூவின் கீழ் இந்த படம் வருமா என்ற பெரிய எதிர்பார்ப்புடன்  வெளியான இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

எனினும் இந்த விமர்சனங்கள் இப்படத்தின் வசூலை பாதிக்கவில்லை. அதன்படி இந்திய பாக்ஸ் ஆபிஸில், லியோ மொத்தம் ரூ. 403.56 கோடி வசூல் செய்தது. . சர்வதேச அளவில் இப்படம் 204.1 கோடி வசூல் செய்தது. ஒட்டுமொத்த ரன் 607.66 கோடி வசூலில் முடிந்தது, இதனால் இது தளபதி விஜய்யின் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

லியோ & ஜெயிலரின் பட்ஜெட்

விஜய்யின் லியோ படம் ரூ. 285 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.  அதில் விஜய்யின் சம்பளம் மற்றும் சந்தைப்படுத்தல் செலவு ஆகியவை அடங்கும். அதே நேரம் ஜெயிலர் படம் 200 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. இதில் ரஜினியின் முன்கூட்டிய சம்பளம் மற்றும் சந்தைப்படுத்தல் செலவுகளும் அடங்கும். மேலும் இந்த படத்தின் லாபத்தின் ஒரு பகுதியையும் தயாரிப்பாளர் ரஜினிக்கு வழங்கினார். 

leo

ஜெயிலர் - லியோ ரேட்டிங்

IMDb இல், விஜய்யின் படம் 57,000 பயனர்களின் வாக்குப் பங்குடன் 10 இல் 7.2 என்ற ரேட்டிங்கில் உள்ளது. Rotten Tomatoes இல், Tomatometer இல் லியோ 80% ரேட்டிங்கை பெற்றுள்ளார். இது பார்வையாளர்களின் மதிப்பீட்டில் 72% மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.IMDB-ல் 33,000 பயனர்களின் வாக்குப் பங்குடன் ஜெயிலர் 10க்கு 7.1 ரேட்டிங்கை பெற்றுள்ளது. Rotten Tomatoes' Tomatometer இல், அது 50% மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. பார்வையாளர்களின் மதிப்பீட்டில், இது 89% என மதிப்பிடப்பட்டுள்ளது.

click me!