இப்போ 4 படம் லைனில் இருக்கு.. 73 வயதிலும் குறையாத சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேகம் - என்னென்ன படங்கள் தெரியுமா?

Ansgar R |  
Published : Jan 08, 2024, 04:26 PM IST

Super Star Rajinikanth Line-Ups : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 73 வயதை கடந்துவிட்டபோதிலும் இன்றளவும் வேகம் குறையாமல் தனது சிறப்பான நடிப்பால் தனது ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகின்றார்.

PREV
14
இப்போ 4 படம் லைனில் இருக்கு.. 73 வயதிலும் குறையாத சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேகம் - என்னென்ன படங்கள் தெரியுமா?
Lokesh Kanagaraj Thalaivar 171

எதிர்வரும் 2025ம் ஆண்டு தனது 50வது ஆண்டு திரை வாழ்க்கையில் நுழையுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 73 வயதிலும் துடிப்போடு நடித்து வருவது அவருடைய ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சிபடுத்தி உள்ளது. இளம் நடிகர்களுக்கு இணையாக அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி வருகிறார், அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

சென்னையில் இருந்தும் 'கலைஞர் 100' விழாவில் கலந்து கொள்ளாத விஜய் - அஜித்! காரணம் கமல் - ரஜினியா?

24
Mari Selvaraj Thalaivar 172

மேலும் சில தினங்களுக்கு முன்பு வெளியான தகவலின்படி அவருடைய 172வது திரைப்படத்தில் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாகவும், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் அந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மாரி செல்வராஜ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் முதல் முறையாக இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

34
Nelson Dilipkumar Thalaivar 173

அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய 173வது திரைப்படத்தில் பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஏற்கனவே ஜெயிலர் என்கின்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த நெல்சன் திலிப்குமார், இரண்டாவது முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைய உள்ளார். இது ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா என்ற யூகங்களும் தற்பொழுது இணையவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது.

44
Karthik Subburaj Thalaivar 174

மேலும் அவருடைய 174வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே "பேட்ட" என்கின்ற மாபெரும் ஹிட் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து இயக்கி வெற்றி கண்டவர் கார்த்திக் சுப்புராஜ். மேலும் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகர் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த பட வரிசைகள் குறித்த தகவல்கள் சில நம்பத்தகுந்த ஆதாரங்களை கொண்டு கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இதுக்குமேல மறைக்க முடியாது... திருமண அறிவிப்பை வெளியிட தயாராகும் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா?

Read more Photos on
click me!

Recommended Stories