தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியான ஹீரோயினாக கலக்கி வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி படத்துக்காக தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ், அப்படத்திற்கு பின்னர் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
27
Actress keerthy suresh
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது ரகு தாத்தா என்கிற தமிழ் படம் உருவாகி உள்ளது. இந்தி எதிர்ப்பை மையமாக வைத்து உருவாகி இருக்கும் அரசியல் நையாண்டி படமான இதை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.
37
keerthy suresh photos
இதுதவிர பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கல்கி 2898AD திரைப்படத்திற்கு கீர்த்தி சுரேஷ் டப்பிங் பேசி இருப்பதாக கூறப்படுகிறது. நாக் அஸ்வின் இயக்கிய இப்படம் வருகிற ஜூன் மாதம் 27ந் தேதி திரைக்கு வர உள்ளது. நாக் அஸ்வினின் முதல் படமான மகாநடியில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்திருந்தார்.
47
keerthy suresh recent Photos
இதுவரை தென்னிந்திய திரையுலகில் கலக்கி வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். அங்கு பேபி ஜான் என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்துள்ளார் கீர்த்தி.
பேபி ஜான் திரைப்படம் தமிழில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இப்படத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி. இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார்.
67
keerthy suresh stunning photos
இப்படி பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் தன்னுடைய உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
77
keerthy suresh latest photos
அதில் சேலையில் செம்ம அழகாக இருக்கும் கீர்த்தி சுரேஷிடம், இதுபோன்று நீங்கள் எப்போது கல்யாணம் செய்துகொள்ளப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.