எதிர்நீச்சலுக்கு எகிறிய டிஆர்பி... பின்னுக்கு தள்ளப்பட்ட சிறகடிக்க ஆசை - இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ

First Published Jun 13, 2024, 2:15 PM IST

சன் டிவியில் கடந்த வாரத்தோடு முடிவடைந்துள்ள எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பியில் சிறகடிக்க ஆசை சீரியலை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.

serial TRP

சினிமாவை போல் சின்னத்திரை சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் மவுசு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சீரியல்களுக்கு எந்த அளவு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கிறது என்பதை டிஆர்பி டேட்டிங்கை வைத்து தான் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டின் 23-வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியாகி இருக்கிறது. அதில் சன் டிவியில் கடந்த வாரத்துடன் முடிவடைந்த எதிர்நீச்சல் சீரியல் ஒரு இடம் முன்னேறி இருக்கிறது. 

Tamil serial TRP

டாப் 10 டிஆர்பி பட்டியலில் விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட ஆஹா கல்யாணம் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஆகிய சீரியல்கள் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளன. குறிப்பாக 10வது இடத்தில் உள்ள ஆஹா கல்யாணம் சீரியலுக்கு 5.51 டிஆர்பி புள்ளிகளும், 9ம் இடத்தில் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுக்கு 6.20 டிஆர்பி புள்ளிகளும் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக சன் டிவியின் மல்லி  சீரியல் 6.31 புள்ளிகளுடன் 8ம் இடத்தை பிடித்துள்ளது.

இதையும் படியுங்கள்... 14 இயக்குனர்கள் இணைந்து ஒரே நாளில் எடுத்து முடித்து... கின்னஸ் சாதனை படைத்த தமிழ் படம் பற்றி தெரியுமா?

Latest Videos


Top 10 Tamil serial TRP

கடந்த வாரம் 6-ம் இடம்பிடித்த பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 6.45 டிஆர்பி புள்ளிகளுடன் 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அதேபோல் சன் டிவியில் கேப்ரியல்லா நடிப்பில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் கடந்த வாரத்தை காட்டிலும் 3 இடம் முன்னேறி 6.48 டிஆர்பி புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது. அதேபோல் கடந்த வாரம் 5-வது இடத்தில் இருந்த வானத்தைப் போல சீரியல், இந்த வாரமும் 7.68 புள்ளிகளுடன் அதே இடத்தை தக்கவைத்து உள்ளது.

Ethirneechal Serial Climax TRP

இதற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தில் கடந்த வாரம் எதிர்நீச்சல் சீரியல் இருந்த நிலையில், கிளைமாக்ஸ் வாரத்தில் 7.84 டிஆர்பி புள்ளிகளுடன் 3 இடத்துக்கு முன்னேறியதோடு, கடந்த சில வாரங்களாக 3ம் இடத்தில் நீடித்து வந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலை நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. அதற்கு 7.70 புள்ளிகள் கிடைத்துள்ளன. முதல் இரண்டு இடங்களை வழக்கம்போல் சன் டிவியின் டாப் 2 சீரியல்களான சிங்கப்பெண்ணே மற்றும் கயல் ஆகிய சீரியல்கள் ஆக்கிரமித்துள்ளன. இதில் கயல் சீரியலுக்கு 8.65 டிஆர்பி புள்ளிகளும், சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 9.57 டிஆர்பி புள்ளிகளும் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... வனிதா விஜயகுமார் முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை வரை.. தவறான உறவில் சிக்கி சின்னாபின்னமான சீரியல் நடிகைகள்..

click me!