KRK movie OTT: மே 27ம் தேதி KRK படம் ஓடிடியில் ரிலீஸ்..ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நயன்தாரா,விக்னேஷ் சிவன்

Anija Kannan   | Asianet News
Published : May 19, 2022, 03:22 PM IST

KRK Movie OTT Release: விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.

PREV
15
KRK movie OTT: மே 27ம் தேதி KRK படம் ஓடிடியில் ரிலீஸ்..ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நயன்தாரா,விக்னேஷ் சிவன்
KRK-OTT release

மறக்க முடியாத நினைவாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிற்கு காதல் மலர காரணமாக இருந்த, திரைப்படம் நானும் ரௌடிதான். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா கூட்டணி இணைந்துள்ள படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இவர்களுடன் சமந்தாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.  

25
KRK-OTT release

தனது 25 வது படமான இந்த படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார். இந்த திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளது.இந்த திரைப்படம், இளசுகள் முதல் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதால், செம்ம வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
 

35
KRK-OTT release

முக்கோண காதல் கதையை கொண்ட இந்த திரைப்படத்தில் கண்மணியாக நயன்தாரா மற்றும் கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தா ஜோடி ஏற்று நடித்துள்ளனர்.இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய் சேதுபதி அசத்தியுள்ளார். இந்த படத்தில், கண்மணியை விட கதிஜா தான் சிறப்பு என்று கதிஜாவை ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று கொண்டாடி  வருகின்றனர். காதலரே இப்படி செய்தால் என்ன செய்வது என நயன்தாரா ரசிகர்கள் விக்னேஷ் சிவன் மீது கோபம் அடைந்தார்கள்.

45
KRK-OTT release

சமீபத்தில், காத்து வாக்குல ரெண்டு காதலை பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்கள். இந்நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கிடந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது.

 

55
KRK-OTT release

ஆம், வருகிற மே 27ம் தேதி பிரபல ஓடிடி தளமான டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர். முன்னனதாக,  நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் மாதம் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் என்று கூறப்படுகிறது.  இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
 மேலும் படிக்க....ஆணுறை குறித்து விளக்கியது சரியா..? இல்லை தவறா..? சிம்பு பட நடிகையின் பேச்சால் சர்சையை கிளப்பிய பயில்வான்!

Read more Photos on
click me!

Recommended Stories