GV Prakash Kumar : வெற்றியைவிட அதிக தோல்வி படங்களை கொடுத்த ஜிவி பிரகாஷ்.. அவரின் ஹிட் & பிளாப் மூவி லிஸ்ட் இதோ

Published : Apr 04, 2024, 09:41 AM IST

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது பிசியான ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கும் ஜிவி பிரகாஷின் திரைப்பயணம் பற்றி பார்க்கலாம்.

PREV
15
GV Prakash Kumar : வெற்றியைவிட அதிக தோல்வி படங்களை கொடுத்த ஜிவி பிரகாஷ்.. அவரின் ஹிட் & பிளாப் மூவி லிஸ்ட் இதோ
GV Prakash Kumar

வசந்த பாலன் இயக்கிய வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ் குமார். முதல் படத்திலேயே தன்னுடைய அசத்தலான பாடல்களால் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஜிவி பிரகாஷுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன. பின்னர் செல்வராகவன் உடன் கூட்டணி அமைத்து அவர் பணியாற்றிய ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

25

இதையடுத்து ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத்திருமகள். சைவம் என வரிசையாக வெற்றிப்படங்களில் பணியாற்றிய ஜிவிக்கு தேசிய விருது மட்டும் எட்டாக் கனியாக இருந்தது. அது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்துக்கு இசையமைத்ததன் மூலம் வென்று அசத்தினார் ஜிவி. தற்போது இசையமைப்பதை குறைத்துக் கொண்டு ஹீரோவாக நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஜிவி.

இதையும் படியுங்கள்... கள்வன் முதல் ஃபேமிலி ஸ்டார் வரை... இந்த வாரம் மட்டும் தியேட்டரில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறதா?

35

சொல்லப்போனால் கோலிவுட்டில் மிகவும் பிசியான நடிகர் அவர் தான். அவர் நடித்துள்ள கள்வன் படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக அவர் நடித்துள்ள டியர் என்கிற திரைப்படம் வருகிற ஏப்ரல் 11-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படி வரிசையாக ஜிவி பிரகாஷின் படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கும் நிலையில், அவரின் ஹிட் மற்றும் பிளாப் படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

45
ஹிட் படங்கள் (GV Prakash Hit Movies)

ஜிவி பிரகாஷின் முதல் படமான டார்லிங் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்த திரிஷா இல்லேனா நயன்தாரா படமும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது. பின்னர் தொடர் தோல்விகளை கொடுத்த ஜிவிக்கு சசி இயக்கிய சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தது. இதையடுத்து அண்மையில் பேச்சிலர், ஐங்கரன், அடியே, ரெபல் போன்ற படங்கள் அவரின் ஹிட் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளன.

55
தோல்வி படங்கள் (GV Prakash Flop Movies)

ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்து வெளியான படங்களில் தோல்வி படங்கள் தான் அதிகம். அந்த வகையில் பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, எம்.ராஜேஷ் இயக்கிய கடவுள் இருக்கான் குமாரு, புரூஸ் லீ, பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார், செம, குப்பத்து ராஜா, வாட்ச்மேன், 100% காதல், வணக்கம்டா மாப்ள, வசந்த பாலன் இயக்கிய ஜெயில் போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தன.

இதையும் படியுங்கள்... Paiyaa 2 : கதை ரெடி... ஆனால் ‘பையா 2’வில் நடிகர் கார்த்தி நடிக்க மறுப்பது ஏன்? உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி

Read more Photos on
click me!

Recommended Stories