கள்ளக்குறிச்சி விஷச் சாராய குடித்து பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இவ்வளவு உயிர் பலிக்கும் காரணம் மெத்தனால் தான் என தெரியவந்துள்ளது.
23
Kallakurichi Hooch Tragedy
இதுதொடர்பாக வழக்கு சிபிசிஐடி போலீசார் 5 தனிப்படைகளை அமைத்து கைது நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரணையை தொடங்கியுள்ளார். இதற்கிடையே கள்ளச் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் மற்றும் மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ராஜ், மாதேஷ் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஷச் சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான சிவகுமாரை சென்னை எம்.ஜி,ஆர். நகரில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அவரை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் விஷச் சாராயம் தயாரிக்க மெத்தனால் விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிவகுமார் கைதை அடுத்து கைது எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.