லியோ படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை ஐந்தே நாளில் சல்லி சல்லியாய் நொறுக்கிய கல்கி 2898AD திரைப்படம்

Published : Jul 02, 2024, 12:45 PM IST

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள பேண்டஸி திரைப்படமான கல்கி 2898AD திரைப்படம் லியோ படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

PREV
14
லியோ படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை ஐந்தே நாளில் சல்லி சல்லியாய் நொறுக்கிய கல்கி 2898AD திரைப்படம்
Prabhas

தேசிய விருது வென்ற மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின், தற்போது இரண்டாவதாக இயக்கியுள்ள திரைப்படம் தான் கல்கி 2898AD. இப்படத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் தீபிகா படுகோனே, திஷா பதானி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கல்கி 2898AD திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இது அவர் இசையமைக்கும் 50வது படமாகும்.

24
Kalki 2898AD

பேண்டஸி கதையம்சம் கொண்ட கல்கி 2898AD திரைப்படத்தை வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஜூன் 27-ந் தேதி திரைக்கு வந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆன இப்படம் விமர்சன ரீதியாக சற்று கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இதையும் படியுங்கள்... Atlee Next Movie : கமலின் கால்ஷீட்டை கொத்தாக தூக்கிய அட்லீ... ஆண்டவரின் அடுத்த பட அப்டேட் இதோ

34
Kalki 2898AD box Office Collection

கல்கி 2898AD திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே ரூ.191 கோடி வசூலித்து மாஸ் காட்டியது. இதையடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வசூல் வேட்டை நடத்திய இப்படம் வார நாட்களிலும் நல்ல வசூலை வாரிக்குவித்து வருகிறது. அதன்படி நேற்று வேலை நாளான திங்கட்கிழமை மட்டும் கல்கி 2898AD திரைப்படம் உலகளவில் ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. இதன் மூலம் லியோ படத்தின் லைஃப் டைம் வசூலையும் கல்கி 2898AD முறியடித்துள்ளது.

44
Kalki 2898AD beats Leo Movie Box Office

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்து கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் மொத்தமாக ரூ.620 கோடி வசூலித்து இருந்தது. கல்கி 2898AD திரைப்படம் நான்கு நாட்களில் ரூ.555 கோடி வசூலித்திருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.70 கோடி வசூலித்ததன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் லியோ படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை ஐந்தே நாட்களில் அடிச்சுதூக்கி கெத்து காட்டி இருக்கிறது.

இதையும் படியுங்கள்...  Bussy Anand Vijay : விறகுக்கடை முதலாளியாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் தளபதியாக மாறியது எப்படி?

Read more Photos on
click me!

Recommended Stories