தன்னை விட 7 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த சந்தோஷ் நாராயணன்.. அவங்களும் பிரபல பாடகி தான்..

Published : Jul 11, 2024, 10:46 AM IST

சந்தோஷ் நாராயணின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் பிரபல பாடகி மீனாட்சி ஐயரை திருமணம் செய்து கொண்டார்

PREV
18
தன்னை விட 7 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த சந்தோஷ் நாராயணன்.. அவங்களும் பிரபல பாடகி தான்..
santhosh narayanan

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் சந்தோஷ் நாராயணன். திருச்சியை சேர்ந்த இவர் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த பின் ரெக்கார்டிங் இன்ஜினியராக பணியாற்ற தொடங்கினார். பின்னர் மணிரத்னம் மூலம் குரு படத்தில் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக்கு சந்தோஷ் நாராயணனுக்கு கிடைத்தது. 

28
santhosh narayanan

இதை தொடர்ந்து 2012-ம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது தனித்துவமான இசை பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் சந்தோஷ் நாராயணன். 

38
santhosh narayanan

இதை தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவியத்தொடங்கின. பீட்சா, சூது கவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், எனக்குள் ஒருவன், 36 வயதினிலே, இறுதிச்சுற்று, காதலும் கடந்து போகும், மனிதன், இறைவி என பல படங்களுக்கு இசையமைத்தன் மூலம் படு பிசியான இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார்.

48
Santhosh Narayanan

கபாலி, பைரவா, கொடி,  காலா, பரியேறும் பெருமாள், வட சென்னை, கர்ணன் ஆகிய படங்களுக்கு இசைமைத்தன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் பாடல்களுக்கென ரசிக பட்டாளமே இருக்கின்றனர். இவர் இசையமைத்த பெரும்பாலான பட ஹிட் ஆல்பங்களாகவே அமைந்தன.

58
santhosh narayanan meenakshi iyer

குறிப்பாக படங்கள் ஹிட்டாக வில்லை என்றாலும் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் சந்தோஷ் நாராயணன். சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏடி படத்திற்கும் இவர் தான் இசையமைப்பாளர். இதன் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்துள்ளார் சந்தோஷ் நாராயணன். 

68
santhosh narayanan family photos

இந்த நிலையில் சந்தோஷ் நாராயணின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் பிரபல பாடகி மீனாட்சி ஐயரை திருமணம் செய்து கொண்டார். மீனாட்சி ஐயர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அவரின் முதல் கணவர் வெங்கடேசன். அவருக்கு பிறந்த மகள் தீக்ஷிதா. இவரை சந்தோஷ் நாராயணன் தான் தத்தெடுத்துள்ளார்.

78
santhosh narayanan family photos

தீ என்று அழைக்கப்படும் இவரும் பிரபல பாடகி தான். நான் நீ, ஏய் சண்டக்காராரா, ரௌடி பேபி என ஹிட் பாடல்களை பாடியிருந்தாலும், என்ஜாயி என்சாமி என்ற ஆல்பம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். 

 

88
santhosh narayanan family photos

சந்தோஷ் நாராயணின் மனைவி மீனாட்சி ஐயரும் பாடகி தான். கர்நாடக சங்கீத பாடகியான இவர், மெட்ராஸ் படத்தின் டைட்டில் ட்ராக்கை பாடியிருப்பார்.  இவர் சந்தோஷ் நாராயணனை விட 7 வயது மூத்தவர் ஆவார். இவர்களின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

click me!

Recommended Stories