Deepika Padukone : தீபிகா படுகோன் கர்ப்பமாவே இல்லையா? வாடகை தாய் மூலம் குழந்தை பெற போகிறாரா? உண்மை என்ன?

Published : Jul 03, 2024, 04:58 PM IST

நடிகை தீபிகா படுகோன் உண்மையில் கர்ப்பமாக இருக்கிறாரா.. அல்லது வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறப்போகிறாரா என்பது பாலிவுட்டில் விவாதப் பொருளாக உள்ளது.

PREV
19
Deepika Padukone : தீபிகா படுகோன் கர்ப்பமாவே இல்லையா? வாடகை தாய் மூலம் குழந்தை பெற போகிறாரா? உண்மை என்ன?
deepika padukone

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிகர் ரன்வீர் சிங்கை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தான் கர்ப்பமாக இருப்பதை தீபிகா படுகோன் அறிவித்தார். வரும் செப்டம்பர் மாதம் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளதாக கூறப்படுகிறது.

29
deepika padukone

சமீபத்தில் கல்கி 2898 ஏடி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் தீபிகா நடித்திருந்தார். அந்த படத்தின் புரமோஷன் பணிகளில் வயிற்றில் குழந்தையுடன் தீபிகா கலந்து கொண்டார்.  ஆனால் கர்ப்பமாக இருக்கும் போதும் அவர் ஹை ஹீல்ஸ் அணிந்தது குறித்து சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.

39
deepika padukone

மேலும் தீபிகா உண்மையிலேயே கர்ப்பமாக இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.. அவர் கர்ப்பிணி போல் நடிப்பதாகவும்  தீபிகாவின் கர்ப்பிணி வயிற்றையே போலி வயிறு என்றும் சிலர் விமர்சித்தனர்.

49
Deepika Padukone

ஒவ்வொரு முறையும் அவரின் வயிற்றின் வித்தியாசமாக தெரிவதாகவும் சிலர் கருத்து பதிவிட்டு வந்தனர். எனவே  தீபிகா உண்மையில் கர்ப்பமாக இருக்கிறாரா.. அல்லது வாடகைத் தாய் மூலம் குழந்தை பிறக்குமா என்பது பாலிவுட்டில் விவாதப் பொருளாக உள்ளது.

 

59
Deepika Padukone

பிரபல ஐவிஎஃப் நிபுணர் டாக்டர் கௌரி அகர்வாலும் இதற்கு பதிலளித்தார். தீபிகாவின் கர்ப்பம் குறித்தும் பல சந்தேகங்களை எழுப்பினார். மேலும், பாலிவுட்டில் பல நடிகைகள் மிகவும் வயதானவர்களாகி வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெறுகின்றனர் எனவும், சிலர் ஐவிஎஃப் முறையை நாடுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

69
deepika padukone

கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் தீபிகா பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அவரின் வயிறு போலி கர்ப்ப வயிறாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார் கௌரி அகர்வால். தீபிகாவின் வயிறு கர்ப்பமாக இருக்கும் வயிறு போல் இல்லாததே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

79
deepika padukone

மேலும் பேசிய அவர் “ ஏறக்குறைய எல்லா ஹீரோயின்களும்.. தங்கள் உடலையும் அழகையும் பராமரிக்க நினைக்கிறார்கள். கருவுற்ற உடனேயே உடலில் கொழுப்பு இயற்கையாகவே அதிகரிக்கிறது. உடல் ஒரே மாதிரியாக இருக்கக்கூடாது. முக அம்சங்களும் மாறுபடும். எனவே, பல பாலிவுட் நடிகைகள் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெறுகிறார்கள். பெண்களுக்கு 50 வயது வரை IVF செய்ய அனுமதி உண்டு.” என்று தெரிவித்தார்.

89
deepika padukone with ranveer singh

மேலும் பேசிய அவர் “ இந்தியாவில் IVF செய்வதற்கு பல சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் உள்ளன.  தற்போது தீபிகா படுகோனுக்கு 38 வயதாகிறது. தற்போதைய வாழ்க்கை முறையால் இந்த வயதில் குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் குறைவு. ஆனால் அதே நேரத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒரு பெண் 45 வயது வரை குழந்தை பிறக்கும் சாத்தியக்கூறுகளும் உள்ளது..” என்று தெரிவித்தார்.

 

99
Deepika Padukone

ஆனால் தீபிகா படுகோன் விஷயத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அவர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற உள்ளதாகவும், தற்போது அவருக்கு போலி பேபி பம்ப் இருப்பதாகவும் பல செய்திகள் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் ஐவிஎஃப் மற்றும் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றவர்கள் பலர் உள்ளனர். இந்த விஷயத்தை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories