இந்தியாவின் 2-வது அதிக சம்பளம் வாங்கும் CEO இவர் தான்.. ஒரு நாள் சம்பளமே ரூ18 லட்சம்..

Published : Jun 09, 2024, 12:11 PM IST

இந்தியாவின் 2-வது அதிக சம்பளம் வாங்கும் CEO யார் என்றும், அவரின் சம்பளம் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
17
இந்தியாவின் 2-வது அதிக சம்பளம் வாங்கும் CEO இவர் தான்.. ஒரு நாள் சம்பளமே ரூ18 லட்சம்..

இந்தியா திறமையாளர்களின் தாயகமாக உள்ளது. இந்தியர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் தங்கள் வெற்றிக் கதையை எழுதுகிறார்கள். கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை முதல் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா வரை பலரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அவர்களில் சலில் பரேக் ஒருவர்.

27

யார் இந்த சலில் பரேக் ?

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸின் சிஇஓ மற்றும் எம்டியாக சலில் பரேக் உள்ளார். தனது வியக்க வைக்கும் சம்பளம் காரணமாக அவர் தலைப்புச் செய்திகளில் உள்ளார்.

37

சலில் பரேக்: மொத்த சம்பளம் எவ்வளவு?

Infosys இன் CEO மற்றும் MD, சலில் பரேக், 2024 நிதியாண்டில் மொத்த ஊதியமாக ரூ.66.25 கோடி பெறுகிறார். இதன் மூலம் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது CEO என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். விப்ரோவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி தியரி டெலாபோர்ட்டை விட இது குறைவாகும். அவர் 2024 நிதியாண்டில்  சுமார் ரூ.166 கோடி சம்பாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

47

சலில் பரேக்: கல்விப் பின்னணி

பாம்பே ஐஐடியின் முன்னாள் மாணவரான சலில் பரேக், ஜனவரி 2018 முதல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார். அவர் 1986 ஆம் ஆண்டு ஐஐடி பாம்பேயில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார், பின்னர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் இயந்திரப் பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றார்.

 

57

இன்ஃபோசிஸில் சேருவதற்கு முன்பு, கேப்ஜெமினி நிறூவனத்தில் பணிபுரிந்தார், ஐடி துறையில் கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால அனுபவத்தைக் கொண்டு வந்தார்.

67

சலில் பரேக்கின் சம்பளம் ஏன் அதிகரித்தது?

பரேக்கின் சம்பளத்தில் கணிசமான அதிகரிப்பு, பணியாளர்களுக்கு வழங்கப்படும் பங்கு இழப்பீட்டின் ஒரு வடிவமான Restricted Stock Units (RSUs) காரணமாகும். அவரது மொத்த இழப்பீட்டில், 39.03 கோடி RSU-வில் இருந்து வந்தது. மேலும், சம்பளமாக ரூ.7 கோடியும், ஓய்வுக்கால பலன்களாக ரூ.47 லட்சமும், போனஸாக ரூ.7.47 கோடியும் பெற்றுள்ளார்.

 

77
CEO, Infosys, Salil Parekh

மேலும் சலில் பரேக்கின் ஒரு நாள் வருமானம் 18 லட்சத்திற்கும் அதிகமாகும். 2023ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.56 கோடியும், 2022-ம் நிதியாண்டில் ரூ.71 கோடியும் சம்பாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories