School Teacher: லீவு விஷயத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு! பள்ளிக் கல்வித்துறை அதிரடி!

Government School Teacher: தமிழக அரசு ஊழியர்கள் இனி விடுப்பு எடுக்க 'களஞ்சியம்' என்ற புதிய செயலியை பயன்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் விடுப்பு விண்ணப்பங்கள் இந்த செயலி மூலமாக மட்டும் பெறப்படும்.

Tamilnadu Government

தமிழகத்தில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழிகள் பணியாற்றி வருகின்றனர். அவ்வப்போது பல்வேறு புது திட்டங்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக அரசின் பல்வேறு பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் எடுக்கும் லீவுகள், சம்பள விவரங்கள் மற்றும் ஊழியர்களின் பணி அறிக்கைகள் உள்ளிட்டவற்றையும் டிஜிட்டல் மயமாக்க தமிழக அரசு முடிவு செய்தது. 

இதையும் படிங்க: School College Holiday: ஹேப்பி நியூஸ்! செப்டம்பர் 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Government Employee

இதற்காக களஞ்சியம் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், அரசு ஊழியர்கள் இனி விடுப்பு எடுக்க இந்த செயலியில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில், பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து அலுவலகங்கள், அரசு / உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்கள் ஆகியவற்றில் பணியாற்றி வரும் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் செப்டம்பர் 1ம் தேதி முதல்  பல்வேறு வகையான காரணங்களினால் அரசால் அனுமதிக்கப்பட்ட விடுப்பினை எடுக்க களஞ்சியம் செயலி வாயிலாக  உள்ளீடு செய்து அலுவலர் / தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்திட வேண்டும்.


School Education Department

இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இனி வரும் நாட்களில் விடுப்பு சார்ந்த விவரங்களை களஞ்சியம் என்ற புதிய செயலி வாயிலாக உள்ளீடு செய்து உரிய அலுவலருக்கு அனுப்ப வேண்டுமென கருவூலக கணக்கு ஆணையரால் கடிதம் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Kalanjiyam Application

அதன்படி பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து அலுவலகங்கள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பணியாற்றி வரும் அனைத்து வகை ஆசிரியர்கள், பணியாளர்கள் நடப்பு செப்டம்பர் 1-ம் தேதி முதல் எடுக்கும் விடுப்புக்கு இந்த செயலி வாயிலாக மட்டுமே அனுமதி பெற முடியும்.

இதையும் படிங்க: School Student: தமிழகம் முழுவதும் பறந்த முக்கிய உத்தரவு! இனி மாணவர்கள் இந்த தேர்வு எழுவது கட்டாயம்!

School Teacher

இந்த செயலியில் சம்பந்தப்பட்ட பள்ளி, விடுப்புக்கு விண்ணப்பிப்பவர், அதனை பரிசீலனை செய்பவர், ஒப்புதல் வழங்கும் அதிகாரி என நிர்ணயம் செய்து அதற்காக குழுவை உருவாக்கி விடுப்புகளுக்கான அனுமதியை பெற்று கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதனுடன், இந்தாண்டில் இதுவரை விடுப்பு எடுத்த நபர்களின் விவரங்களையும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!