School Student: தமிழகம் முழுவதும் பறந்த முக்கிய உத்தரவு! இனி மாணவர்கள் இந்த தேர்வு எழுவது கட்டாயம்!
தமிழ்நாட்டில் சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் தமிழ் மொழித்தேர்வு தொடர்பாக தேர்வுத்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
School Student
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் தமிழ் மொழி கட்டாயம் என்ற நடைமுறை உள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் பொருந்தும் என கூறப்பட்டது.
Mother Tongue Students
இந்நிலையில் தான் சிறுபான்மை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் விலக்கு வேண்டும். மாறாக அவரவர் தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழை கட்டாய பாடமாக்குவதில் இருந்து ஓராண்டு விலக்கு அளித்தது.
இதையும் படிங்க: School College Holiday: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
Tamilnadu Directorate of Examination
அதனடிப்படையில் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வு எழுதிய சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்வுத்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், தெலுங்கு, கன்னடம், உருது, மலையாளம் ஆகிய மொழிகளை தாய் மொழியாக கொண்ட சிறுபான்மை மொழி மாணவர்களும் தமிழ் தேர்வு கட்டாயமாக எழுத வேண்டும் என்று கூறியுள்ளது.
School Exam
10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் 13 வகையான விவரங்களை சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்தை கட்டாயமாக எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.