ராங்காலால் ராங் ரூட்டில் போன மனைவி! எவ்வளவு சொல்லியும் கேட்காமல் உல்லாசம்.. இறுதியில் கணவர் செய்த பயங்கரம்.!

First Published | Sep 27, 2023, 12:02 PM IST

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

cell phone

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த சென்னியப்பன் (35). மருந்து விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி கோகிலவாணி (26). இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் இரட்டை குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், ராங்கால் மூலம் கோகிலவாணிக்கு மேட்டூரை சேர்ந்த கணேசன் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

Tap to resize

அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சென்னியப்பன் மனைவியை கடுமையாக தாக்கி கிரைண்டர் கல்லை தூக்கி மனைவியின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர் குழந்தையுடன் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். இந்த சம்பவத்தை அடுத்து கோகிலவாணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos

click me!