அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 6 மாவட்டங்களில் பொளந்து கட்டப்போகுதாம் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

First Published Sep 17, 2023, 12:08 PM IST

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவநிலை மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை அவ்வப்போது பெய்து வருகிறது. காலை வெயில் வாட்டி வதைப்பதும் மாலை நேரத்தில் கனமழை வெளுத்து வாங்குவதும் வழக்கமாக இருந்து வருகிறது. 

இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னையில் நேற்று மாலை முதல் விடிய, விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதேபோல் தமிழ்நாட்லும் பரவலாக பல்வேறு மாவட்டங்களின் மழை பெய்தது. 

இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்தில்  விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளுர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

click me!