இன்றைய தக்காளி விலை என்ன.? கோயம்பேட்டில் வெங்காயம், பீட்ரூட், கேரட் விலை நிலவரம் என்ன.?

First Published | Aug 23, 2024, 7:18 AM IST

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலை விவரம்.

தக்காளி,வெங்காயம் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 23 ரூபாய் முதல் 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Power Shutdown: வீட்ல வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க.. இன்று சென்னையில் எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?
 

முருங்கைக்காய் விலை நிலவரம்

முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 
 

Tap to resize

சின்ன வெங்காயம் விலை என்ன.?

புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வாழைக்காய் ஒன்று 10 ரூபாய்க்கும், சௌசௌ ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

இஞ்சி விலை நிலவரம்

இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், எலுமிச்சை ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 30 முதல் 40 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 180ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Latest Videos

click me!