Power Shutdown: வீட்ல வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க.. இன்று சென்னையில் எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?
சென்னையின் முக்கிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
Power Shutdown
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில்மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Power Cut
உஸ்மான் சாலை:
பஸ்சுல்லா சாலை, சாரி தெரு, பார்த்தசாரதிபுரம், உண்ணாமலை அம்மாள் தெரு, ஹபிபுல்லா சாலை, ரெங்கன் தெரு, துரைசாமி சாலை, ராஜன் தெரு, அருளாம்பாள் தெரு, காந்தி தெரு, ஜவர்லால் நேரு தெரு, ராமச்சந்தர் ஐயர் தெரு, ராஜபிள்ளைத்தோட்டம், மாம்பலம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வடக்கு உஸ்மான். சாலை, ரெங்கராஜபுரம் பகுதி, அஜீஸ் நகர், அக்போராபத், பராங்குசாபுரம், சிஆர்பி கார்டன், மங்கேஷ் தெரு, ரயில்வே பார்டர் சாலை, மற்றும் ஸ்டேஷன் வியூ சாலை.
Power Shutdown in Chennai
அத்திப்பேட்டை:
ஐசிஎஃப் காலனி, ஸ்லம் போர்டு, செல்லியம்மன் கோயில் நகர், செல்லியம்மன் நகர், அக்னி எஸ்டேட், எம்ஜிஆர் புரம், அவைன் மெயின் ரோடு இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முதல் அவைன் பார்லர் வரை, வடக்குப் பகுதி சிட்கோ தொழிற்பேட்டை.
Today Power Shutdown
பெசன்ட் நகர்:
7வது அவென்யூ, ருக்குமணி சாலையின் ஒரு பகுதி, டைகர் வரதாச்சாரி சாலையின் ஒரு பகுதி, கங்கை தெரு ஒரு பகுதி, அருண்டல் கடற்கரை சாலையின் ஒரு பகுதி, கடற்கரை சாலையின் ஒரு பகுதி.
சிறுசேரி:
சிறுசேரி பஞ்சாயத்து, எல்&டி அடுக்குமாடி குடியிருப்பு, புதுப்பாக்கம் பஞ்சாயத்து.
Power Shutdown in Chennai
நங்கநல்லூர்:
நேரு காலனி ஒரு பகுதி, 5வது மெயின் ரோடு ஒரு பகுதி, 39 முதல் 42வது தெரு, கன்னியா தெரு, குளக்கரை தெரு, கபிலர் தெரு, காலேஜ் ரோடு ஒரு பகுதி, வேம்புலியம்மன் கோயில் தெரு, 4வது மெயின் ரோடு பகுதி.
Power Cut in Chennai
செயின்ட் தாமஸ் மவுண்ட்:
மீனம்பாக்கம் சுங்க அலுவலகம், பாரத ஸ்டேட் வங்கி, தபால் நிலையம், குமரன் நகர், ராஜீவ் காந்தி தெரு, விஓசி தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, மீனம்பாக்கம் முழுவதும், பாண்டியன் தெரு, விருதுநகர் ஓட்டல், ஹோண்டா ஷோரூம், பிஎம்டபிள்யூ ஷோரூம், குயின் தெரு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், குளத்துமேடு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.