கருணாநிதியின் வலதுகரமான ஆற்காடு வீராசாமிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி..!

Published : Jan 19, 2024, 07:03 AM IST

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் தந்தையுமான ஆற்காடு வீராசாமி உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

PREV
13
கருணாநிதியின் வலதுகரமான ஆற்காடு வீராசாமிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி..!
arcot veerasamy

திமுக முன்னாள் பொருளாளராகவும், முன்னாள் மின்துறை அமைச்சராகவும் இருந்த ஆற்காடு வீராசாமி(92) வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருந்து வருகிறார். மருத்துவமனையை போன்று வீட்டிலேயே கட்டில் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைக்கப்பட்டு அவரை பார்த்து கொள்வதற்காக பராமரிப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

23
arcot veerasamy admitted to hospital

இந்நிலையில் திடீரென ஆற்காடு வீராசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

33
Vadapalani hospital

இதனால், முடநீக்கியல்துறை மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். தேவைப்படும் பட்சத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் வாய்ப்புள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. கருணாநிதி இருந்த வரை அவரது வலதுகரமாக ஆற்காடு வீராசாமி இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read more Photos on
click me!

Recommended Stories