ஜோடி பொருத்தம் பிரமாதம்.. மீண்டும் தனுஷுடன் இணைந்த அந்த ஹீரோயின்.. ஜோராக நடைபெறும் D50 படப்பிடிப்பு!
Ansgar R |
Published : Sep 02, 2023, 11:59 PM IST
பிரபல தமிழ் நடிகர் தனுஷ் அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தற்போது அவர் தனது ஐம்பதாவது பட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
தனுஷ் நடிக்கும் இந்த 50-வது திரைப்படத்தை அவரே இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது, ஏற்கனவே பா பாண்டி என்ற திரைப்படத்தை இயக்கி தனுஷ் வெளியிட்டிருந்த நிலையில், இரண்டாவது முறையாக தான் நடிக்கும் ஒரு திரைப்படத்தை அவர் இயக்கி வருவது பாராட்டத்தக்கது.
தொடர்ச்சியாக தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் பல படங்களில் நடிக்க அவர் கமிட்டாகி உள்ளார். இந்த 50 வது படம் முடிந்த பிறகு தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் ஒரு திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். அரசியல் மாபியா கதைக்களம் கொண்ட அந்த திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா நடிக்க உள்ளார் என்ற தகவலும் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
34
Actor Nagarjuna
அதே போல அந்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகை ராஸ்மிகா மந்தானா நடிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் தற்போது இயக்கிய வரும் தனது ஐம்பதாவது திரைப்படத்தில் ஏற்கனவே அவருடன் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்த நித்யா மேனன் இந்த திரைப்படத்திலும் அவருடன் இணைந்து நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
44
Nithya Menon
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரம் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் அவர் கதையின் நாயகியாக நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.