இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் இல்லை... ஆடியோ லாஞ்சில் இயக்குனர் ஷங்கர் கொடுத்த ட்விஸ்ட்

Published : Jun 02, 2024, 08:51 AM IST

இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற நிலையில், அதில் இயக்குனர் ஷங்கர் பேசியதை பார்க்கலாம்.

PREV
14
இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் இல்லை... ஆடியோ லாஞ்சில் இயக்குனர் ஷங்கர் கொடுத்த ட்விஸ்ட்
Indian 2 Director Shankar

கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

24
Indian 2

இதில் இயக்குனர் ஷங்கர் பேசியதாவது : “நான் கமல் சாரிடம் பல வருடங்களுக்கு முன்பே இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேட்டிருக்கிறேன். ஆனால் அந்த சமயத்தில் என்னிடம் எந்த கதையும் இல்லை. ஆனால் நாட்டில் நடக்கும் ஊழல்கள் பற்றி செய்திகள் வாயிலாக படிக்க படிக்க, இந்தியன் தாத்தா இப்போ நடக்கும் ஊழல்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை படமாக்க முடிவு செய்து, அதற்காக கதையை தயார் செய்து கமல் சாரிடம் சொன்னேன். அவரும் நடிக்க சம்மதித்தார்.

இதையும் படியுங்கள்... இந்தியன் 2 இசை வெளியீடு.. மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்.. விழாவை சிறப்பித்த யங் இயக்குனர்கள் - வைரல் வீடியோ!

34
Indian 2

இந்தியன் 2 படத்துக்கான லுக் டெஸ்ட் எடுக்கும்போது அவர் மேக்கப் போட்டு மீண்டும் சேனாபதியாக வந்தபோது எனக்கு புல்லரித்தது. கமல் சார் தன்னை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார். அவரை நான் 360 டிகிரி ஆக்டர் என்று தான் அழைப்பேன். ஆனால் இந்த படத்தில் அவரை 361 டிகிரி ஆக்டராக பார்த்தேன். அந்த 361வது டிகிரி என்னவென்றால் அவர் காலத்திற்கு ஏற்றபடி தன்னுடைய நடிப்பையும் மாற்றி இருக்கிறார். எனக்கு 100 சதவீதம் திருப்தி ஆகும் வரை அனிருத் வேலை செய்திருக்கிறார்.

44
Indian 2

சின்னக்கலைவாணர் விவேக் மற்றும் நடிகர் மனோபாலா ஆகியோர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டாலும் இந்தியன் 2 அவர்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. ஒரு இயக்குனருக்கு எவ்வளவு பெரிய எண்ணங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் சுபாஸ்கரன் போன்ற தயாரிப்பாளர் இல்லாமல் அது சாத்தியமாகாது. இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் காட்சிகள் இடம்பெறாது. ஆனால் இந்தியன் 3-ல் அவர் வருவார் என்றும் இயக்குனர் ஷங்கர் கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்...  திறமைக்கு அங்கீகாரம்... விகடன் விருதுகள் 2023; நடிகர் சித்தார்த்தின் 'சித்தா' 5 விருதுகளை வென்றுள்ளது!

Read more Photos on
click me!

Recommended Stories