மறுபுறம், ஏற்கனவே உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் தளபதி விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை வைத்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள அவருடைய 171வது திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், இரு முக்கிய திரைப்படங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.