இந்தியாவில் 100 கோடி கிளப்பில் முதன்முதலில் நுழைந்த இயக்குனர் இவர் தான்.. ஆனா ராஜமௌலி இல்ல..

Published : May 23, 2024, 04:06 PM ISTUpdated : May 23, 2024, 04:10 PM IST

2008 ஆம் ஆண்டில் பிரபல தமிழ் இயக்குனரால் உருவாக்கப்பட்ட ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படம் முதல் முறையாக இந்தியாவில் ரூ 100 கோடி கிளப்பில் நுழைந்தது

PREV
15
இந்தியாவில் 100 கோடி கிளப்பில் முதன்முதலில் நுழைந்த இயக்குனர் இவர் தான்.. ஆனா ராஜமௌலி இல்ல..
rrr enters 1000 crores

ஒரு காலத்தில் 100 கோடி வசூலே பெரிதாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 1000 கோடி வசூல் என்பது புது மைல்கல்லாக மாறியுள்ளது. பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப் 2, பதான், ஜவான், தங்கல் என பல படங்கள் 1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளன. 

25
Director AR Murugadoss

எஸ்.எஸ்.ராஜமௌலி, சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட பிரபல இயக்குநர்களுக்கு உள்நாட்டில் ரூ.100 கோடியைத் தாண்டுவது பெரிய விஷயமாக இருக்காது.. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு அப்படி இல்லை. 2008 ஆம் ஆண்டில் பிரபல தமிழ் இயக்குனரால் உருவாக்கப்பட்ட ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படம் முதல் முறையாக இந்தியாவில் ரூ 100 கோடி கிளப்பில் நுழைந்தது. அவர் வேறு யாருமில்லை. ஏ.ஆர். முருகதாஸ் தான்.

35

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான கஜினி இந்தியாவில் ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்த முதல் படமாகும்.. 2008-ல் வெளியான, ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம், முருகதாஸ் தமிழில் இயக்கிய கஜினியின் இந்தி ரீமேக் ஆகும். தமிழில் சூர்யா நடித்த நிலையில் இந்தி ரீமேக்கில் அமீர் கான் நடித்திருந்தார்.

 

45

இந்த படத்தின் மூலம் அசின் பாலிவுட்டில் அறிமுகமானார். பிரதீப் ராவத் நெகட்டிவ் ரோலில் நடித்தார். இந்திய அளவில் ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்த முதல் படமாக கஜினி பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி பெற்றது. அது மட்டுமின்றி உலக பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடியைத் தாண்டிய முதல் ஹிந்தித் திரைப்படமும் கஜினிதான்.

55

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர் முருகதாஸ் அடுத்த சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளார். SK23 என்று அழைக்கப்படும் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக உள்ளது. அதே போல் பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் 2025ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories