காதலித்தது என்னமோ 2 மாதம் தான்.. ஆனா ஹன்சிகாவுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்த சிம்பு..

Published : Jul 24, 2024, 10:15 AM IST

ஹன்சிகாவை காதலிக்கும் போது சிம்பு அவருக்காக கோடிக்கணக்கில் செலவு செய்ததாக ஒரு வதந்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
17
காதலித்தது என்னமோ 2 மாதம் தான்.. ஆனா ஹன்சிகாவுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்த சிம்பு..
Simbu

தனது தந்தை இயக்கிய பல படங்களில் சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், அவர் ஹீரோவாக அறிமுகமான படம் காதல் அழிவதில்லை. 
பின்னர் பல ஹிட் படங்களை கொடுத்த சிம்பு, பல சர்ச்சைகள், பல நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொண்டார். குறிப்பாக தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சிம்பு சந்தித்த சர்ச்சைகள் ஏராளம்.

27
nayantara and simbu

சிம்பு முதலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்ததாக கூறப்பட்டது. பின்னர் நயன்தாராவும் சிம்புவும் காதலித்து வந்தனர். பின்னர் இந்த ஜோடி பிரேக் அப் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகையான ஹன்சிகாவும் சிம்புவும் காதலிப்பதாக கூறப்பட்டது. இருவரும் சில காலம் டேட்டிங் செய்து வந்தனர். மேலும் தங்கள் காதலை பொதுவெளியிலும் அறிவித்தனர்.

37

ஹன்சிகாவும் சிம்புவும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காதலிக்க தொடங்கிய இரண்டே மாதத்தில் இருவரும் தங்கள் காதலை பிரேக் அப் செய்ததாக அறிவித்தனர். எனினும் தங்கள் பிரிவுக்கான காரணத்தை இருவரும் வெளியிடவில்லை. 

47

இதனிடையே ஹன்சிகா தனது தோழியின் முன்னாள் கணவரான சோஹைல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும். சோஹைலின் விவாகரத்துக்கு நான் காரணம் இல்லை என்றும் அவர் விவாகரத்து பெற்ற பிறகுதான் தங்கள் காதல் வளர்ந்தது என்றும் ஹன்சிகா பதிலளித்தார்.

57

இந்த நிலையில் சிம்பு ஹன்சிகா காதல் குறித்த மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. ​​ஹன்சிகாவை காதலிக்கும் போது சிம்பு அவருக்காக ரூ 6 கோடி செலவு செய்ததாக ஒரு வதந்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. எனினும் இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

67

தற்போது ஹன்சிகா 'ரவுடி பேபி,' 'காந்தாரி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் உருவாகி வரும் ‘நாஷா’ என்ற வெப் சீரிஸிலும் ஹன்சிகா நடித்து வருகிறார்.

 

77
Simbu

பல சர்ச்சைகளுக்கு பிறகும் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக சிம்பு இருக்கிறார். சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிம்பு தற்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. எனினும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் இருப்பதால் சிம்பு ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories