அப்போது விரைவாக வந்த என் அம்மா என் உடையை சரி செய்வது போல, அவர் கையை என் இடுப்பில் இருந்து விலக்கிவிட்டுள்ளார். ஆனால் இது குறித்து எனக்கு அப்போது எதுவுமே தெரியாது. மீண்டும் ஒருமுறை சிரஞ்சீவியுடன் நான் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் பொழுது, எனக்கு கொடுக்கப்பட்ட ஆடை சற்று நீளமாக இருந்தது, ஆகையால் அதை இன்னும் குட்டையாக்கி தரச்சொன்னேன், இதை கேட்ட சிரஞ்சீவி எனது தாயிடம் ஓடோடி சென்று, அன்று உங்கள் மகளின் இடையில் நான் கை வைத்ததற்காக அப்படி செய்தீர்களே இப்பொழுது பாருங்கள், உங்கள் மகள் தன் ஆடையை அவளே குறைக்க சொல்கிறாள் என்று கூறி சிரித்தார். அப்போது தான் எனக்கு அன்று நடந்த விஷயம் தெரியவந்தது.
விஜய்யின் ஃபேவரட் ஹீரோயின் நான் தாங்க... அடித்து கூறிய நடிகை! புன்னகையோடு Yes சொன்ன தளபதி!