"விக்ரமை அழுக்காக காட்டியுள்ளார் பா ரஞ்சித்" Thangalaan ட்ரைலர் பாக்கல.. படமும் பார்க்கமாட்டேன் - பிரவீன்!
Thangalaan : நாளை மறுநாள் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி உலக அளவில் வெளியாகிறது பா ரஞ்சித்தின் கனவு திரைப்படமான தங்கலான்.
sethu movie
ஒரு திரை கலைஞன் என்பவர், தான் ஏற்று நடிக்கின்ற கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்தால் அது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும். ஆனால் அப்படி நடிப்பதற்காக வெகு சில நடிகர்கள், தங்கள் உடலைக் கூட பெரிய அளவில் வருத்திக்கொண்டு நேர்த்தியாக அந்த கதாபாத்திரங்களில் நடித்து முடிப்பதுண்டு. அப்படி, கடந்த 1999ம் ஆண்டு வெளியான "சேது" என்கின்ற திரைப்படத்திற்காக தன்னையே செதுக்கிக் கொண்டு நடித்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாறி இருப்பவர் தான் சியான் விக்ரம். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் உலகில் வெற்றிகரமான நாயகனாக பயணித்து வருகிறது.
விஜய்யின் ஃபேவரட் ஹீரோயின் நான் தாங்க... அடித்து கூறிய நடிகை! புன்னகையோடு Yes சொன்ன தளபதி!
Pa Ranjith
இந்நிலையில் பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே அந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியான நிலையில், நாளை மறுநாள் சுதந்திர தினத்தன்று உலக அளவில் தங்கலான் திரைப்படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்திற்காக பட குழுவினர் முழு வீச்சில் ப்ரோமோஷன் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Thangalaan movie
சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், நடிகர் விக்ரமிடன் ஒரு சர்ச்சையான கேள்வி கேட்கப்பட்டது. அதாவது அஜித் மற்றும் சூர்யா போன்ற நடிகர்களுக்கு இருப்பதை போல உங்களுக்கு ஏன் பெரிய அளவிலான ரசிகர்கள் கூட்டம் இல்லை? என்று ஒரு செய்தியாளர் கேட்க, அதற்கு பெரிய அளவில் கோபப்படாமல் பேசிய விக்ரம், "என்னுடைய ரசிகர்களின் கூட்டம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நீங்கள் தங்கலான் திரைப்படத்தை பார்க்க வாருங்கள். டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்கள் நானே உங்களுக்கு டிக்கெட் போட்டு தருகிறேன்" என்று கூறி அவர் வாயை அடைத்தார்.
praveen gandhi
இந்த சூழலில் "ரட்சகன்", "ஜோடி" மற்றும் "ஸ்டார்" போன்ற பல நல்ல திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் பிரவீன் காந்தி, தங்கலான் திரைப்படம் குறித்து மனம் திறந்து இருக்கிறார். இயக்குனர் பா ரஞ்சித் இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமை மிகவும் அழுக்காக காட்டியிருக்கிறார். ஆகையால் அந்த திரைப்படத்தின் டிரைலரை நான் பார்க்கவில்லை. படம் விரைவில் வெளியாக போகிறது என்று கூறுகிறார்கள். அந்த திரைப்படத்தையும் நான் பார்க்கப் போவதில்லை. கவுண்டம்பாளையம் எடுத்த ரஞ்சித் தான் மிக சிறந்த இயக்குனர் என்று கூறியிருக்கிறார்.
Independence Day 2024 : சுதந்திர தினத்தன்று மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய தேசபக்தி படங்கள் லிஸ்ட் இதோ