Madhampatti Rangaraj : மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி இவங்க தானா? வைரலாகும் க்யூட் பேமிலி போட்டோஸ்..

Published : May 01, 2024, 05:14 PM IST

மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

PREV
16
Madhampatti Rangaraj : மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி இவங்க தானா? வைரலாகும் க்யூட் பேமிலி போட்டோஸ்..

சமையல் துறையில் சிறந்து விளங்கி வரும் மாதம்பட்டி ரங்கராஜ், தனது வித்தியாசமான தனித்துவமான சமையல் மூலம் பிரபலமானவர். சமையலில் பல புதுமைகளை புகுத்தி பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியவர் தான் இந்த மாதம்பட்டி ரங்கராஜ். 

26

முதலில் சின்ன சின்ன விசேஷங்களுக்கு சமைத்து வந்த அவர், பின்னர் படிப்படியாக கேட்டரிங் துறையில் முன்னேறினார். இதுவரை 400-க்கும் மேற்பட்ட திருமணங்களில் மாதம்பட்டி ரங்கராஜனின் உணவு பரிமாறப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தியின் திருமணத்திற்கும் இவர் தான் உணவு சமைத்துள்ளார்.

36

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும், கடல் கடந்தும் கூட கேட்டரிங் ஆர்டர்களை பெற்று வருகிறார். பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, எல் முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, பல முன்னணி நடிகர், நடிகைகள், பலரும், மாதம்பட்டி ரங்கராஜின் அறுசுவை உணவை ருசித்துள்ளனர்.

 

46

விக்ரம் படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசன் கொடுத்த விருந்து, கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு கொடுத்த விருந்து ஆகியவை மாதம்பட்டி ரங்கராஜ் தயாரித்த உணவுகள் தான் பரிமாறப்பட்டது.

56

மாதம்பட்டி ரங்கராஜின் குடும்பத்தை பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது. இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

66

இவர் பிரபல சமையல் கலைஞர் மட்டுமல்ல ஒரு நடிகரும் தான். மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் மாதம்பட்டி ரங்கராஜ். தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்த பெங்குயின் படத்திலு முக்கிய ரோலில் நடித்திருப்பார்.தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் அவர் நடுவராக பங்கேற்று வருகிறார்.

 

click me!

Recommended Stories