Power Shutdown in Chennai: சென்னை மக்களே உஷார்.. இன்று இந்த பகுதிகளில் எல்லாம் 5 மணிநேரம் மின்தடை!

First Published | Jul 5, 2024, 6:27 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர், கிண்டி, பல்லாவரம் உள்ளிட்ட  பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Power Shutdown

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

Power Cut

அம்பத்தூர்:

கொலடி, தேவி நகர், கேபிஎஸ் நகர், அரவின் நகர், டிடிஎஸ் நகர், ஈஸ்வரன் நகர், நடேசன் நகர், அபிராமி நகர், அன்பு நகர் பகுதி, செல்லயம்மன் நகர், மில்லினியம் டவுன் ஃபேஸ் 1, 2, மற்றும் 3, பாடசாலை தெரு, கம்பர் நகர்.

Tap to resize

Power Shutdown in Chennai

கிண்டி:

ஆதம்பாக்கம், சரஸ்வதி நகர் பகுதி, கல்கி நகர், விநாயகபுரம், ஏ.ஜி.எஸ். காலனி, 5வது தெரு, 6வது தெரு, 7வது தெரு, எஸ்காலம்ஸ் பிளாட்ஸ், டிஆர்ஏ பிளாட்ஸ், சல்மா பிளாட்ஸ், பாலாஜி நகர் 23வது தெரு முதல் 37வது தெரு, ஆலந்தூர், மியாட், டி,டி, குவார்ட்டர்ஸ், மவுண்ட் மருத்துவமனை, வடக்கு சில்வர் தெரு, டிஃபென்ஸ் காலனி,  நங்கநல்லூர், வோல்டாஸ் காலனி, 100 அடி சாலை ஒரு பகுதி , சிவில் ஏவியேஷன் காலனி, ஐயப்பா நகர், கன்னிகா காலனி ஒரு பகுதி, லஷ்மி நகர், 3வது ஸ்டேஜ், எஸ்.பி.ஐ. காலனி 3வது ஸ்டேஜ், ராம் நகர், லட்சுமி நகர், குபேரன் நகர், 12வது தெரு, குபேரன் நகர் 10வது தெரு, ராம் நகர் தெற்கு 17வது தெரு.

Power Cut Today Chennai

வேளச்சேரி:

வேளச்சேரி பைபாஸ் 100 அடி சாலை, லஷ்மி நகர் 1வது தெரு முதல் 6வது தெரு, ராஜீவ் காந்தி தெரு, எம்ஜிஆர் நகர் 1வது தெரு முதல் 7வது தெரு, வெங்கடேஸ்வரா நகர் 1வது தெரு முதல் 2வது தெரு.

Power Shutdown Today

பல்லாவரம்:

ஆதம் நகர், அனகாபுத்தூர், சங்கர் நகர் 38வது தெரு முதல் 41வது தெரு, அப்பாசாமி நகர், சங்கர் நகர் மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!