திரைப்படத்தின் கதை ஒரு தாய் மற்றும் மனைவியாக தனது குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்கும் ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை மையமாகக் கொண்டுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இதை 'பெரிய திரையில் மெகா சீரியல்' என குறிப்பிட்டு இருந்தார். மாமனிதன் என டைட்டில் வைத்ததையும் அவர் தாக்கி பேசி இருந்தார்.