நேபாள மொழியில் நடிக்க துவங்கி அதன்பிறகு ஹிந்தி திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய நடிகை தான் மனிஷா கொய்ராலா. தமிழில் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான "பாம்பே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கால் பதித்த இவர், அதனை தொடர்ந்து இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா மற்றும் மாப்பிள்ளை போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த இவரும் பொதுவெளியில் பலமுறை புகைபிடித்து அது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.