குடும்பத்தில் புதுவரவு.. செம குஷியோடு குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா - குவியும் வாழ்த்து

Published : Jul 01, 2024, 11:02 AM ISTUpdated : Jul 01, 2024, 11:36 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் வெற்றிபெற்று டைட்டில் வின்னர் ஆன அர்ச்சனா தற்போது குட் நியூஸ் ஒன்றை சொல்லி இருக்கிறார்.

PREV
16
குடும்பத்தில் புதுவரவு.. செம குஷியோடு குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா - குவியும் வாழ்த்து
Bigg Boss Tamil 7 Title Winner Archana Ravichandran bought new car

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. சர்ச்சைகளுக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத நிகழ்ச்சியாக நடந்து முடிந்த பிக்பாஸ் 7-ல் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனார்.

26
Archana Bought New Car

பிக்பாஸ் வரலாற்றிலேயே டைட்டில் வின்னரான இரண்டாவது பெண் போட்டியாளர் அர்ச்சனா. இதற்கு முன்னர் கடந்த 2-வது சீசனில் ரித்விகா முதன்முறையாக டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் நான்கு சீசன்களாக ஆண் போட்டியாளர்களே வெற்றி பெற்றனர்.

36
Archana buys new car

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் வெற்றிபெற்ற அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அதோடு வீடு மற்றும் கார் ஒன்றும் அவருக்கு சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அர்ச்சனாவுக்கான ரசிகர் வட்டம் பெரிதானது.

இதையும் படியுங்கள்... Radhika :வரலட்சுமியின் திருமண விழாவில் மகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட ராதிகா சரத்குமார் - வைரலாகும் வீடியோ

46
Archana family

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அதில் பங்கேற்ற ரவீனா தாஹா, விஷ்ணு, பூர்ணிமா, பிரதீப் மற்றும் மாயா ஆகியோர் சினிமாவில் அடுத்தடுத்து பிசியான நிலையில், அர்ச்சனா மட்டும் தனது அடுத்தகட்ட நகர்வு பற்றி அறிவிக்காமல் உள்ளார்.

56
BiggBoss Archana new car

இதனிடையே அவரும் சீரியல் நடிகர் அருண் குமாரும் காதலிப்பதாக சின்னத்திரை வட்டாரத்தில் தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதுபற்றி இருவருமே விளக்கம் கொடுக்காவிட்டாலும் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

66
Bigg Boss Title Winner Archana

இந்த நிலையில், தற்போது கார் ஷோரூமில் புது கார் டெலிவெரி எடுக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் அர்ச்சனா. இது அவர் வாங்கிய கார் என நினைத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் இது பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட கார், அதைதான் தற்போது குடும்பத்துடன் சென்று வாங்கி இருக்கிறார் அர்ச்சனா.

இதையும் படியுங்கள்... 2024-ல் தடுமாறும் தமிழ் சினிமா.. 6 மாதம் ஓவர்; வெளியான 124 படங்களில் வெறும் 6 தான் ஹிட்; அவை என்னென்ன?

click me!

Recommended Stories